/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பிரதமர் பிறந்தநாளை முன்னிட்டு அன்னதானம்
/
பிரதமர் பிறந்தநாளை முன்னிட்டு அன்னதானம்
ADDED : செப் 01, 2025 07:21 PM
வால்பாறை:
வால்பாறையில், பிரதமர் மோடியின், 74வது பிறந்த நாள் மற்றும் விநாயகர் சதுர்த்தி விசர்ஜன ஊர்வலத்தையொட்டி, பா.ஜ., சார்பில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
வால்பாறை நகர பா.ஜ., சார்பில், பிரதமர் மோடியின் 74வது பிறந்தநாள் மற்றும் விநாயகர் விசர்ஜன ஊர்வலத்தையொட்டி, அன்னதானம் வழங்கும் விழா மண்டல் தலைவர் செந்தில்முருகன் தலைமையில் நடந்தது.
நகராட்சி அலுவலகத்தின் முன் நடந்த விழாவில், பா.ஜ., கோவை மாவட்ட தலைவர் சந்திரசேகர், ஏ.டி.பி., தொழிற்சங்க மாநில தலைவர் அமீது, பா.ஜ., மாவட்ட துணைத்தலைவர் தங்கவேல், அ.ம.மு.க., நகர செயலாளர் நெல்லைசெல்வம் ஆகியோர் துவக்கி வைத்தனர். அன்னதான விழாவில், ஏராளமான மக்கள் கலந்து கொண்டனர்.