/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'உணவு தானியங்களுக்கு மழையால் பாதிப்பு இல்லை'
/
'உணவு தானியங்களுக்கு மழையால் பாதிப்பு இல்லை'
ADDED : அக் 27, 2025 11:51 PM

கோவை: ''கோவையில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக உணவு தானிய கிடங்குகளில், உள்ள உணவு தானியங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டு உள்ளது,'' என்று நுகர் பொருள் வாணிபக்கழக முதுநிலை மண்டல மேலாளர் பழனிக்குமார் தெரிவித்துள்ளார்.
அவர் கூறியதாவது:
கோவையில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக உணவு தானிய கிடங்குகளில், உள்ள உணவு தானியங்கள், மழையால் பாதிக்காமல் பாதுகாப்பாக வைக்கப்பட்டு உள்ளன. இதற்கான இட வசதி மற்றும் பாதுகாப்பு வசதிகள் உள்ளன.
எவ்வளவு மழை வந்தாலும் பிரச்னை வராது. கூடுதலாக நான்கு குடோன்கள் சிங்காநல்லுார், சித்தாபுதுார், மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி ஆகிய இடங்களில் உள்ளன. மழைக்கு முன்பாகவே பாதுகாப்பு நடவடிக்கை எடுத்துள்ளோம்.
கோவை மாவட்டத்தில் உள்ள ரேஷன்கடைகளுக்கு இந்த மாதம், 16 ஆயிரத்து 807 டன் உணவு தானியங்கள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் 29 ஆயிரத்து 862 டன் உணவு தானியம் கையிருப்பு உள்ளது. போதிய பாதுகாப்பு வசதி உள்ள அரங்குகள் இருப்பதால், வடகிழக்கு பருவ மழையால் எந்த பாதிப்பு வராது.
இவ்வாறு, அவர் கூறினார்.

