ADDED : அக் 29, 2025 12:03 AM
வால்பாறை: வால்பாறை நகராட்சி கால்பந்து விளையாட்டு மைதானத்தில் ஆண்டு தோறும், மாநில, மாவட்ட அளவிலான கால்பந்து போட்டிகள் நடக்கிறது. இந்நிலையில், கால்பந்து சங்க நிர்வாகிகளின் கோரிக்கையை ஏற்று, இரு ஆண்டுகளுக்கு முன் விளையாட்டு மைதானம் நகராட்சி சார்பில் சீரமைக்கப்பட்டது.
விளையாட்டு மைதானத்தை சுற்றி அதிகளவில் ஆக்கிரமிப்புக்கள் உள்ளதாலும், வாகனங்கள் நிறுத்தப்படுவதாலும், விளையாட்டு வீரர்கள் விளையாட முடியாத நிலை உள்ளது.
கால்பந்து சங்க நிர்வாகிகள் கூறுகையில், 'வால்பாறை நகராட்சி விளையாட்டு மைதானத்தையே, கால்பந்து வீரர்கள் நம்பி உள்ளனர். இந்த ஆண்டும், மாவட்ட, மாநில அளவிலான கால்பந்து போட்டி நடக்கவுள்ளது. போட்டி துவங்குவதற்கு முன் நகராட்சி சார்பில், விளையாட்டு மைதானத்தை முழுமையாக சீரமைக்க வேண்டும்.
பழுதடைந்த கலையரங்கத்தையும் நகராட்சி சார்பில் புதுப்பிக்க வேண்டும். நகராட்சி மைதானத்தில் விதிமுறையை மீறி நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களை போலீசார் அப்புறப்படுத்த வேண்டும்,' என்றனர்.

