/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
முதல்வர் கவனத்துக்கு... 'தமிழக பருத்தி கழகம்' உருவாகுமா?
/
முதல்வர் கவனத்துக்கு... 'தமிழக பருத்தி கழகம்' உருவாகுமா?
முதல்வர் கவனத்துக்கு... 'தமிழக பருத்தி கழகம்' உருவாகுமா?
முதல்வர் கவனத்துக்கு... 'தமிழக பருத்தி கழகம்' உருவாகுமா?
ADDED : நவ 05, 2024 11:37 PM

உலகளவில் பருத்தி விளைச்சல் குறைவாக இருக்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. பருத்தி விளைச்சலை, 50 சதவீதம் அதிகரிக்க வாய்ப்புகள் இருக்கின்றன. ஆண்டுக்கு, 325 லட்சம் பேல் பருத்தி விளைவிக்கப்படுகிறது; 2030ல், நமக்கு, 500 லட்சம் பேல் பருத்தி தேவைப்படும் என கணக்கிடப்பட்டிருக்கிறது. தேவைக்கேற்ப விளைவிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. அதற்குரிய நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும்.
தமிழக அளவில் ஆண்டுக்கு, 100 லட்சம் பேல்களை விட அதிகமாகவே தேவை. ஆனால், 6 -7 லட்சம் பேல்களே விளைவிக்கப்படுகிறது. பருத்தி உற்பத்தியை மூன்று மடங்கு அதிகரிக்க வாய்ப்பிருப்பதாக, ஜவுளித்துறையினர் கூறுகின்றனர். பவானிசாகர், விழுப்புரம், பண்ருட்டி போன்ற பகுதிகளில் அறுவடை முடிந்ததும் பருத்தி விளைவிப்பர்; இப்போது, அதை குறைத்து விட்டனர். சேலம், ஆத்துார், கொங்கனாபுரம், விருதுநகர், கன்னியாகுமரி, கோவில்பட்டி, வாசுதேவநல்லுார், திருநெல்வேலி, பழனி, ஒட்டன் சத்திரம், அருப்புக்கோட்டை, தேனி, கும்பகோணம், திருவாரூர் உள்ளிட்ட பகுதிகளில் பருத்தி விளைவிக்கப்படுகிறது. தமிழக அரசு முயற்சித்தால், பருத்தி விளைச்சலை அதிகரிக்க முடியும்.
இந்திய பருத்தி கழகம் போல், 'தமிழக பருத்தி கழகம்' உருவாக்க வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.