/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இரண்டாம் நாளாக நேற்றும் பள்ளிக்கு குண்டு மிரட்டல்
/
இரண்டாம் நாளாக நேற்றும் பள்ளிக்கு குண்டு மிரட்டல்
ADDED : அக் 09, 2024 12:11 AM
கோவை : தொடர்ந்து இரண்டாம் நாளாக, கோவை ஸ்டேன்ஸ் பள்ளிக்கு, நேற்றும் வெடிகுண்டு மிரட்டல் வந்ததால், பரபரப்பு ஏற்பட்டது.
கோவை - அவிநாசி சாலையில், செயல்பட்டு வரும் இப்பள்ளியில், 6000க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர்.காலாண்டு விடுமுறை முடிந்து, நேற்று முன்தினம் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டன. வகுப்புகள் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, பள்ளியில் வெடிகுண்டு வைத்திருப்பதாக, 'இ - மெயிலில்' தகவல் வந்தது. தகவல் அறிந்த பெற்றோர் பதறியடித்து சென்று, பிள்ளைகளை வீடுகளுக்கு அழைத்துச் சென்றனர்.
பள்ளி நிர்வாகத்தினர் ரேஸ்கோர்ஸ் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார், வெடிகுண்டு நிபுணர்கள் நடத்திய சோதனையில், வெடிகுண்டு மிரட்டல் வதந்தி என தெரிந்தது.
இந்நிலையில், இதே பள்ளிக்கு நேற்று காலையும் வெடிகுண்டு மிரட்டல் இ-மெயில் வந்தது. போலீசார், வெடிகுண்டு நிபுணர்கள் நடத்திய சோதனையில், வதந்தி என தெரியவந்தது.
தொடர்ந்து இது போன்ற இ-மெயில் அனுப்பி, பொது அமைதியை சீரழிப் போர் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.