ADDED : ஆக 27, 2026 07:21 PM
ஒலிம்பியன் சர்க்கஸ் வெளிநாட்டு சர்க்கஸ் கலைஞர்கள் பங்கேற்கும் இன்டர்நேஷனல் ஒலிம்பியன் சர்க்கஸ் கோவையில் நடக்கிறது. இந்த சர்க்கஸில் பபுள்ஷோ, ஜக்லிங், சைக்கிளிங், லேசர்மேன், காமெடி கிளவுன், ஏரியல் அண்ட் பாலன்சிங் ஆக் என, பல சுவராஸ்யமான காட்சிகள் இந்த சர்க்கஸில் இடம் பெற்றுள்ளன. குடுப்பத்துடன் சென்று பார்த்து ரசிக்க வேண்டிய சர்க்கஸ்.
இடம்: மாநகராட்சி கலையரங்கம், ஆர்.எஸ்.புரம், கோவை.தேதி: 28, 29 மற்றும் 30 ஆகிய மூன்று நாட்கள் நான்கு காட்சிகள்.
கால்பந்து போட்டிகள் ஸ்பெயின் நாட்டின் கால்பந்து பயிற்சியாளர்கள் கோவையில் ஒரு கால்பந்து போட்டியை நடத்துகின்றனர். இளம் கால்பந்து வீரர்களை அடையாளம் காண, ஸ்பெயின் பிளப் சார்பில் நடத்தப்படும் இந்த போட்டியில், முதல் நாள் 12 வயதில் இருந்து 16 வயதுக்கு உட்பட்டவர்கள் இளம் விரர்கள் பங்கேற்கின்றனர். இதில் சிறப்பாக விளையாடும் வீரர்களுக்கு ஸ்பெயின் சென்று பயிற்சி பெரும் வாய்ப்பு கிடைக்கும். பதிவு கட்டணம், 1000 ரூபாய் செலுத்த வேண்டும்.
இடம்: ஜி.ராமசாமி மெட்ரிக் பள்ளி: வணிக கண்காட்சிபுதிதாக வணிகம் செய்ய விரும்பும் இளைஞர்களுக்கு வாய்ப்பு அளிக்கும் வகையில், பிஸ்னஸ் அண்ட் பிரான்சிஸ் காண்காட்சி நடக்கிறது. இதில் பல்வேறு துறைகள் சார்ந்து, 100 ஸ்டால்கள் இடம் பெறுகின்றன. கல்வி நிறுவனங்கள், கோச்சிங் சென்டர்கள்., வங்கிகள், உணவங்கள் உள்ளிட்ட பல்வேறு தொழில்துறையினர் இந்த கண்காட்சியில் ஸ்டால்கள் அமைத்துள்ளனர். தொழில் துவங்குவோருக்கு வழிகாட்டும் மையமும் செயல்படுகிறது.
இடம்: கொடிசியா வணிக வளாகம்தேதி: 29: நாடக விழா கோவை ஸ்ரீமாருதி கானசபா மற்றும் மித்ரா கிரியேஷன்ஸ் சார்பில், நாடக விழா நடக்கிறது. இந்த விழாவில் ஆர்.எம்.கோபாலகிருஷ்ணன் நடிக்கும் ‘சனீஸ்வரன்‘ மற்றும் ‘காரைக்கால் அம்மையார்’ வரலாற்ணு நாடகம், கோவை கலாலயம் வழங்கும் ‘கண்ணான கண்ணா’ சமூக நாடகம் நடக்கிறது. தமிழகத்தில் பல இடங்களில் அரங்கேற்றம் செய்யப்பட்டு, நாடக ரசிகர்களின் பாராட்டை பெற்ற இந்த நாடகங்கள் கோவையில் மூன்று நாட்கள் நடக்கின்றன. நாடக பிரியர்களுக்கு பார்த்து ரசிக்கலாம். கட்டணம் உண்டு.
இடம்: ஸ்ரீமாருதி கானசபா: குதிரையேற்ற போட்டி தி ஏகுய்ஸ்டெரின் சாப்பியன் லீக் தேசிய அளவிலான குதிரையேற்ற லீக் மற்றும் குதிரை தடை தாண்டுதல் போட்டி -சீசன் 2, கோவையில் நடக்கிறது. குதிரை பந்தைத்தில் ஆர்வம் உள்ளவர்கள் சென்று பார்த்து ரசிக்கலாம்.
இடம்: பிசைடு -தி ஏகுய்ஸ்டெரின் க்ரேஸ்ட் மோளபாளையம்: திரைப்படம் திரையிடல்ஜெர்மன் மொழி திரைப்படங்கள் ஆங்கில வசன வரிகளுடன் திரையிடப்படுகிறது. இதில் 12 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டும் பார்க்க அனுமதி உண்டு, அனுமதி இலவசம்.
இடம்: ஜி.டி.நாயுடு மினி ஆடிட்டோரியம் அவினாசி ரோடு:
