/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பாழடைந்த கிணறு மூடல் வனத்துறை நடவடிக்கை
/
பாழடைந்த கிணறு மூடல் வனத்துறை நடவடிக்கை
ADDED : மார் 22, 2025 11:16 PM
கோவை: கோவை, காரமடை தாலுகா, சீளியூரில் பாதையோரத்தில் இருந்த பாழடைந்த கிணறு, வனவிலங்குகளின் நலன் கருதி மூடப்பட்டது.
சீளியூரில் இருந்து வழுக்குப்பாறை செல்லும் பாதையோரத்தில், தனியார் விவசாய நிலத்தில், பாதுகாப்புச் சுவர் இன்றி, பயன்பாட்டில் இல்லாத கிணறு இருந்தது.
இவ்வழியாக வரும் யானை உள்ளிட்ட வனவிலங்குகள், கிணறுக்குள் தவறி விழும் அபாயம் இருப்பதாக, வனத்துறைக்கு அப்பகுதி விவசாயிகளும், வனவிலங்கு ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்தனர்.
இதுதொடர்பாக, நமது நாளிதழிலும் செய்தி வெளியாகி இருந்தது. இந்நிலையில், காரமடை வனத்துறையினர் சம்பவ இடத்தை ஆய்வு செய்து, பயன்பாட்டில் இல்லாத அந்தக் கிணறை மூடினர். அப்பகுதி விவசாயிகளுக்கும் அபாயமற்ற பாதை கிடைத்திருப்பதால், விவசாயிகள் நன்றி தெரிவித்துள்ளனர்.