/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சிறுத்தையை பிடிக்க வனத்துறை கூண்டு
/
சிறுத்தையை பிடிக்க வனத்துறை கூண்டு
ADDED : நவ 20, 2024 10:37 PM

மேட்டுப்பாளையம்; குடியிருப்பு பகுதிகளில் சுற்றி வரும், சிறுத்தையைப் பிடிக்க, சிறுமுகை வனத்துறையினர் கூண்டு வைத்துள்ளனர்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்த சிறுமுகை சாலையில் உள்ள, சென்னாமலை கரடு, மோத்தேபாளையம் ஆகிய பகுதிகளில், சமீப காலமாக சிறுத்தையின் நடமாட்டம் அதிகரித்துள்ளது.
குடியிருப்பு பகுதிகளிலும், விவசாய தோட்டத்து சாலைகளிலும் உள்ள, நாய்களை சிறுத்தை பிடித்து சென்று விடுகின்றது. இதை பார்த்த பொதுமக்கள், விவசாயிகள் அச்சம் அடைந்துள்ளனர். இதையடுத்து சிறுமுகை வனச்சரக அலுவலர் மனோஜ், சிறுத்தையை பிடிக்க கூண்டு வைக்க, ஏற்பாடு செய்தார்.
சிறுத்தையின் காலடித்தடங்கள் எப்பகுதியில் அதிகளவில் உள்ளன என்பதை, வனத்துறையினர் கண்காணித்து வந்தனர்.
அந்த வகையில் சென்னா மலை கரடு அடிவாரப் பகுதியில் உள்ள, ராதாகிருஷ்ணன் தோட்டத்தின் அருகே, வனத்துறையினர் கூண்டு வைத்து, அதன் உள்ளே, இறைச்சியை வைத்துள்ளனர். மேலும் சிறுத்தை நடமாட்டம் உள்ளதா என, சிறுமுகை வனத்துறையினர், கண்காணிப்பு செய்து வருகின்றனர்.