/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
யானைகள் வருவதை தடுக்க பலாகாய் அகற்றும் வனத்துறை
/
யானைகள் வருவதை தடுக்க பலாகாய் அகற்றும் வனத்துறை
UPDATED : ஏப் 04, 2025 03:13 AM
ADDED : ஏப் 04, 2025 02:17 AM

கூடலுார்:கூடலுார் பகுதியில் பலாப்பழம் தேடி காட்டு யானைகள் ஊருக்குள் வருவதை
தடுக்க, வனத்துறையினர் பலா காய்களை தேடித்தேடி அகற்றும் பணியை துவங்கி
உள்ளனர்.
நீலகிரி மாவட்டம், கூடலுாரில் காட்டு யானைகள்,
குடியிருப்பு பகுதிகளில் இரவு நேரங்களில் நுழைந்து விவசாய பயிர்களை
சேதப்படுத்தி, மக்களையும் அச்சுறுத்தி வருகின்றன.
யானை தாக்கி பலர்
உயிரிழந்தனர்; பலர் காயமடைந்துள்ளனர். இப்பகுதிகளில் பலாப்பழம் சீசன்
விரைவில் துவங்க உள்ளதால், யானைகள் நடமாட்டம் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
இதை
தடுக்க, கூடலுார் வன அலுவலர் வெங்கடேஷ் உத்தரவுபடி, வனத்துறையினர்
குடியிருப்புகள் அருகே பலா மரங்களில் உள்ள காய்களை அகற்றும் பணியில் வன
ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
வனத்துறையினர் கூறுகையில், 'மே மாதம்
பலாப்பழம் சீசன் களை கட்டும். காட்டு யானைகள் பலாப்பழங்களை தேடி வரும்
போது, யானை - மனித மோதல் ஏற்படும்.
'இதை தடுக்கவே, குடியிருப்புகள் அருகே உள்ள பலா மரங்களில் காய்களை அகற்றி வருகிறோம்' என்றனர்.

