தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/காணாமல் போன சிறுவன்: வனத்துறையினர் மீட்பு

காணாமல் போன சிறுவன்: வனத்துறையினர் மீட்பு

காணாமல் போன சிறுவன்: வனத்துறையினர் மீட்பு


UPDATED : நவ 23, 2026 12:00 AM

ADDED : நவ 22, 2026 10:26 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 23, 2026 12:00 AM ADDED : நவ 22, 2026 10:26 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வால்பாறை: வால்பாறை அருகே காணாமல் போன சிறுவனை, வனத்துறையினர் பத்திரமாக மீட்டனர்.

கோவை மாவட்டம், வால்பாறை அடுத்துள்ளது தோணிமுடி எஸ்டேட் முதல் பிரிவு. இந்த எஸ்டேட்டில் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த உத்தின்அலி, தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இவரது மகன் அசில்குல்இஸ்லாம்,7.

இவர் நேற்று காலை, 6:00 மணிக்கு வீட்டிற்கு வெளியில் உள்ள கழிப்பிடத்திற்கு, தன் மகனை இயற்கை உபாதை கழிக்க அழைத்துச்சென்றார். பத்து நிமிடம் கழித்து மீண்டும் வந்து அங்கு பார்த்த போது, மகன் காணாததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இது குறித்து அப்பகுதி மக்கள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். வனச்சரக அலுவலர் கிரிதரன் தலைமையில், வனவிலங்கு மனித மோதல் தடுப்புக்குழுவினர், சம்பவ இடத்திற்கு சென்று சிறுவனை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

ஒரு மணி நேரம் 40 நிமிடம் தேடலுக்கு பின், குடியிருப்பு பகுதியில் இருந்து இரண்டு கி.மீ., தொலைவில் தேயிலை தோட்டத்தில், சிறுவன் வீட்டிற்கு செல்ல வழி தெரியாமல் நிற்பதைக்கண்டு, அவனை மீட்ட வனத்துறையினர் பெற்றோர்களிடம் ஒப்படைத்தனர்.

வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘எஸ்டேட் பகுதியில் தொழிலாளர்கள் பயன்படுத்தும் கழிப்பிடம், வீட்டிற்கு வெளியில் இருப்பதால், இது போன்ற பிரச்னை ஏற்பட்டுள்ளது. வனவிலங்குகள் நடமாட்டம் மிகுந்த எஸ்டேட் பகுதியில், தொழிலாளர்கள் தங்களது குழந்தைகளை பாதுகாப்பாக அழைத்துச்செல்ல வேண்டும். அலட்சியம் காட்டினால் வனவிலங்குகள் தாக்கி உயிரிழக்க நேரிடும்.

எந்த சூழ்நிலையிலும் வீட்டை விட்டு வெளியில் செல்லும் போது, குழந்தைகளை தனியாக செல்ல பெற்றோர்கள் அனுமதிக்கக்கூடாது’ என்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us