/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நெற்றியில் யானைக்கு காயம் சிகிச்சை அளித்த வனத்துறை
/
நெற்றியில் யானைக்கு காயம் சிகிச்சை அளித்த வனத்துறை
நெற்றியில் யானைக்கு காயம் சிகிச்சை அளித்த வனத்துறை
நெற்றியில் யானைக்கு காயம் சிகிச்சை அளித்த வனத்துறை
ADDED : ஜன 24, 2025 10:13 PM

வால்பாறை, ; வால்பாறை - அதிரப்பள்ளி ரோட்டில், காயத்துடன் சுற்றிய யானைக்கு கேரள வனத்துறையினர் சிகிச்சை அளித்தனர்.
கேரள மாநிலம், திருச்சூர் மாவட்டம் சாலக்குடி - வால்பாறை ரோட்டில், அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி அமைந்துள்ளதால், சுற்றுலா பயணியர் அதிக அளவில் வருகின்றனர்.
இந்நிலையில், வால்பாறை - அதிரப்பள்ளி ரோடு அருகில் முகாமிட்டிருந்த யானை கூட்டத்தில், ஒரு ஆண் யானையின் நெற்றியில் காயம் ஏற்பட்டிருப்பதாக, கேரள வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
இதனையடுத்து, வெற்றிலைப்பாறை பகுதியில் முகாமிட்ட யானைக்கு சிகிச்சை அளிக்க சாலக்குடி டி.எப்.ஓ., லட்சுமி தலைமையில், வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு நேற்று இரண்டாவது நாளாக சென்றனர்.
அப்போது, அதிரப்பள்ளி வனப்பகுதியை ஒட்டி, கூட்டத்தில் இருந்து பிரிந்து, தனிந்து நின்றிருந்த காயமடைந்த ஆண் யானையை வனத்துறையினர் கண்டறிந்தனர். இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு சென்ற கால்நடை மருத்துவர் அருண்ஜக்காரியா தலைமையிலான வனத்துறையினர், காயமடைந்த யானையை மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர். அதன்பின் நெற்றியில் காயமடைந்த பகுதியில் மருந்து தடவி, சிகிச்சை அளித்தனர்.
கேரள வனத்துறையினர் கூறியதாவது:
காயமடைந்த நிலையில், சோர்வாக காணப்பட்ட யானைக்கு மயக்க ஊசி செலுத்திய பின் சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த யானை, மற்றொரு யானையுடன் சண்டையிட்டதால், நெற்றியில் தந்தம் குத்தி காயம் ஏற்பட்டுள்ளது. காயமடைந்த இடத்தில் மருந்து தடவப்பட்டுள்ளது.
உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதால், யானைக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது. யானை மயக்கம் தெளிந்த பின், மீண்டும் வனப்பகுதிக்குள் அனுப்பப்படும்.
இவ்வாறு, கூறினர்.