/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
குரங்குகளுக்கு உணவளித்தால் கடும் நடவடிக்கை: வனத்துறையினர் எச்சரிக்கை
/
குரங்குகளுக்கு உணவளித்தால் கடும் நடவடிக்கை: வனத்துறையினர் எச்சரிக்கை
குரங்குகளுக்கு உணவளித்தால் கடும் நடவடிக்கை: வனத்துறையினர் எச்சரிக்கை
குரங்குகளுக்கு உணவளித்தால் கடும் நடவடிக்கை: வனத்துறையினர் எச்சரிக்கை
ADDED : ஜன 01, 2024 08:52 PM
மேட்டுப்பாளையம்:மேட்டுப்பாளையம் ஊட்டி மற்றும் கோத்தகிரி சாலையில், குரங்குகளுக்கு உணவளித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மேட்டுப்பாளையம் ஊட்டி சாலையில் பவானி ஆற்றுப்பாலத்தை கடந்து செல்லும் வழியில் குரங்குகள் நடமாட்டம் அதிகரித்துள்ளன. இந்த குரங்குகள் சாலையோரங்களில் உள்ள குப்பைத் தொட்டிகளில் வீசப்படும் உணவு பொருட்கள், பழங்களை உண்டுவிட்டு, அருகில் உள்ள கடை, வீடுகளுக்குள் புகுந்து தின்பண்டங்களை எடுத்துச் செல்கின்றன.
அதேபோல், மேட்டுப்பாளையம் கோத்தகிரி சாலையில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், கேரளாவில் இருந்தும் வரும் சுற்றுலா பயணிகள் சாலையோரங்களில் உள்ள இடங்களில் உணவு சாப்பிடுகின்றனர். சாப்பிட்டு விட்டு மீதமான உணவுகள், பிளாஸ்டிக் தட்டுகள் போன்றவற்றை தூக்கி வீசுகின்றனர்.
இந்த உணவுகளை சாப்பிட குரங்கள் அதிக அளவில் வருகிறது. குரங்கள் வனத்துக்குள் இருந்து இவ்வாறு வரும் போது, சாலையில் செல்லும் வாகனங்களில் சிக்கி விபத்துக்குள்ளாகின்றன.
இதுகுறித்து மேட்டுப்பாளையம் வனச் சரகர் ஜோசப் ஸ்டாலின் கூறுகையில், ''குரங்களுக்கு சுற்றுலா பயணிகள் உணவளிக்கக்கூடாது.
குரங்களுக்கு மீறி உணவளித்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். வனப்பகுதியையொட்டியுள்ள சாலையோரங்களில் உணவு பொருட்களை வீசக்கூடாது.
அப்படி வீசினால் அபராதம் விதிக்கப்படும். குரங்குகள் ஊருக்குள் வராமல் இருக்கவும், உணவு பொருட்களை வீசி செல்வோரை கண்காணிக்கவும் 2 குழுக்கள் வாயிலாக இப்பகுதிகளில் வனத்துறையினர் தினமும் தீவிர ரோந்து மேற்கொண்டு வருகின்றனர்,'' என்றார்.

