/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பாரஸ்ட் ஹில் அகாடமி மாணவர்கள் அசத்தல்
/
பாரஸ்ட் ஹில் அகாடமி மாணவர்கள் அசத்தல்
ADDED : மே 19, 2025 11:19 PM
பொள்ளாச்சி; பொள்ளாச்சி, வேட்டைக்காரன்புதூர் பாரஸ்ட் ஹில் அகாடமி பள்ளி, 10, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வில் அசத்தியுள்ளது.
பிளஸ் 2வில், மாணவன் ராஜநரசிம்மன் 594 மதிப்பெண்கள் பெற்று முதலிடமும்; மாணவி தீபிகா 565 மதிப்பெண் பெற்று இரண்டாம் இடமும்; ருஹானி 560 மதிப்பெண் பெற்று மூன்றாம் இடமும் பிடித்தனர்.
பிளஸ் 1ல், மாணவி கீர்த்திகா 580 மதிப்பெண் பெற்று முதலிடமும்; சம்யுக்தா 566 மதிப்பெண் பெற்று இரண்டாம் இடமும்; ஹரிணி 539 மதிப்பெண் பெற்று மூன்றாம் இடமும் பிடித்தனர்.
10ம் வகுப்பு தேர்வில், மாணவன் கீர்த்திகுமார், 493 மதிப்பெண் பெற்று முதலிடமும்; மாணவி தர்ஷினி, 492 மதிப்பெண் பெற்று இரண்டாம் இடமும்; மாணவன் ருஜிந்த் 485 மதிப்பெண் பெற்று மூன்றாம் இடமும் பிடித்தனர்.
அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களை, பள்ளி தாளாளர் பாபா ரமேஷ், செயலாளர் பரணி ரமேஷ், ஸ்ரீ சிவரங்கராஜ், பள்ளி முதல்வர் உமாதேவி மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்கள் பாராட்டினர்.