/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வீட்டு பணியாளர் நால்வருக்கு தலா ரூ.80 லட்சத்தில் தனி வீடு முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி தாராளம்
/
வீட்டு பணியாளர் நால்வருக்கு தலா ரூ.80 லட்சத்தில் தனி வீடு முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி தாராளம்
வீட்டு பணியாளர் நால்வருக்கு தலா ரூ.80 லட்சத்தில் தனி வீடு முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி தாராளம்
வீட்டு பணியாளர் நால்வருக்கு தலா ரூ.80 லட்சத்தில் தனி வீடு முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி தாராளம்
ADDED : செப் 05, 2025 01:28 AM

கோவை:தன் வீட்டு பணியாளர்கள் நான்கு பேருக்கு, தலா 80 லட்சம் ரூபாய் செலவில், தனித்தனி வீடு கட்டி கொடுத்துள்ளார் அண்ணா பல்கலை கழக முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி.
கோவை, பொன்னாம் பாளையத்தைச் சேர்ந்தவர் பாலகுருசாமி. அண்ணா பல்கலை முன்னாள் துணை வேந்தர்.
இவர் வீட்டில் கார் டிரைவராக புவனேஸ்வரன், சமையல், வீட்டு வேலை, தோட்ட வேலைகளில் பாக்யா, கிருஷ்ணவேணி, பிரபாவதி ஆகியோர் ஈடுபட்டுள்ளனர்.
இவர்கள் நால்வருக்கும், கோவை ஐ.ஓ.பி., காலனியில் தனித்தனியாக தலா, 3 சென்ட் பரப்பில், 1,000 சதுரடியில், 80 லட்சம் ரூபாய் செலவில் இரு படுக்கை அறை கொண்ட வீடுகளை, சொந்த செலவில் கட்டிக் கொடுத்துள்ளார்.
இவர், இப்படி வீடு கட்டி கொடுப்பது முதல் முறை அல்ல.
துணைவேந்தராக பணிபுரிவதற்கு முன், பெங்களூரில் பணிபுரிந்த போது, தன் வீட்டில் பணி செய்த இருவருக்கு வீடு கட்டி தந்துள்ளார். சென்னையில் பணிபுரிந்தபோது, தன் வீட்டில் பணிபுரிந்தவருக்கும் வீடு கட்டி கொடுத்துள்ளார்.
தன் வீட்டில் பணிபுரிபவர்களின் மருத்துவ செலவு, குடும்ப விசேஷங்கள், அவர்கள் குழந்தைகளின் கல்வி செலவு என, அனைத்துக்கும் உதவிக்கரம் நீட்டி உள்ளார். சிலருக்கு திருமணமும் நடத்தி வைத்துள்ளார்.
இது குறித்து பாலகுருசாமி கூறியதாவது:
தற்போதைய பொருளாதார சூழலில் சம்பளம் வாங்கி, பணம் சேர்த்து வீடு கட்ட அனைவராலும் முடியுமா?
அவர்கள் வாங்கும் சம்பளம் குடும்பம் நடத்தவே போதாது. இப்போதைக்கு என் வீட்டு வளாகத்திலேயே, பணியாட்களுக்கான குடியிருப்பு உள்ளது. அவர்கள் வேலையை விட்டு, ஓய்வு பெற்ற பின் என்ன செய்வர்?
நாம் மட்டும் சொகுசாக, மகிழ்ச்சியாக இருந்தால் போதுமா? நம்மை நன்றாக பார்த்து கொள்பவர்களும் மகிழ்ச்சியாய் இருக்க வேண்டாமா?
அவர்களும் நம் குடும்பத்தில் அங்கம் தானே. முடிந்தவரை உதவி செய்வோம் என்றே அவர்களது பெயரில் தனித்தனியாக நிலம் வாங்கி, தனி வீடு கட்டி கொடுத்தேன்.
இவ்வாறு அவர் கூறினார்.