/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
திருநெல்வேலியில் இருந்து கோவை வரும் வழியில் ஊர், ஊராக திருட்டு 2 சிறுவர் உட்பட நான்கு பேர் கைது
/
திருநெல்வேலியில் இருந்து கோவை வரும் வழியில் ஊர், ஊராக திருட்டு 2 சிறுவர் உட்பட நான்கு பேர் கைது
திருநெல்வேலியில் இருந்து கோவை வரும் வழியில் ஊர், ஊராக திருட்டு 2 சிறுவர் உட்பட நான்கு பேர் கைது
திருநெல்வேலியில் இருந்து கோவை வரும் வழியில் ஊர், ஊராக திருட்டு 2 சிறுவர் உட்பட நான்கு பேர் கைது
ADDED : மார் 16, 2025 12:15 AM
கோவை: திருநெல்வேலியில் இருந்து கிளம்பி வரும் வழியில் ஈரோடு, பரமத்தி, கோவை உள்ளிட்ட இடங்களில் தொடர் திருட்டில் ஈடுபட்ட, இரண்டு சிறுவர்கள் உட்பட நான்கு பேரை, கோவை போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
கோவை, இருகூர், பெரிய தோட்டம் பகுதியை சேர்ந்தவர் நந்தகுமார், 43; மனைவி ஜெயந்தி, 41 தம்பதியர் விவசாயம் செய்து வருகின்றனர்.
விவசாய பொருட்கள் வாங்குவதற்காக கடந்த 3ம் தேதி காலை, வீட்டை பூட்டி சென்றனர். மதியம் வீட்டிற்கு வந்த போது, வீட்டின் முன் பக்க கதவை உடைத்து, 13 சவரன் தங்கம், 100 கிராம் வெள்ளி, ரூ.50 ஆயிரம் பணத்துடன் இருவர் ஓடினர்.
சிறிது துாரத்தில் இரண்டு பைக்குகளில் காத்திருந்தவர்களுடன், தப்ப முயன்றபோது ஒருவர் சிக்கினார். மற்ற மூவர் பணம் நகையுடன் தப்பினர். பிடிபட்ட நபரை சிங்காநல்லுார் போலீசில் பொதுமக்கள் ஒப்படைத்தனர்.
போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்த போது, பிடிபட்ட நபர் திருநெல்வேலியை சேர்ந்த 17 வயது சிறுவன் என்பதும், தப்பி சென்றது, மற்றொரு 17 வயது சிறுவன் மற்றும் சுரேஷ், 24, இசக்கி பாண்டியன், 24 ஆகியோர் என்பது தெரியவந்தது. சிறுவனை சிறுவர் சீர்திருத்தப்பள்ளிக்கு அனுப்பினர்.
உதவி கமிஷனர் வேல்முருகன் தலைமையில், தப்பி சென்றவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. மூவரும் கேரளாவில் இருப்பதாக தகவல் கிடைத்தது.
தனிப்படையினர் கேரளா சென்றனர். அதற்குள் அவர்கள் அங்கிருந்து, புனே சென்று விட்டனர்.
தனிப்படை போலீசார் அவர்களை தொடர்ந்து கண்காணித்து, மூவரையும் புனேவில் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 13 சவரன் தங்கம், 100 கிராம் வெள்ளி மற்றும் ரூ. 35 ஆயிரம் பணம் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.
கைது செய்யப்பட்ட மூவரில் இருவர் சிறையில் அடைக்கப்பட்டனர். 17 வயது சிறுவன் சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பப்பட்டார்.