UPDATED : அக் 10, 2026 12:32 AM
ADDED : அக் 10, 2026 12:28 AM
அ நிறம் | அளவு
ஈச்சனாரி: ஈச்சனாரி அருகேயுள்ள முத்து நகரில் பாதாள சாக்கடை பிரதான குழாய் செல்கிறது. நேற்று காலை, 11:00 மணியளவில் இக்குழாயில் உடைப்பு ஏற்பட்டு, கழிவுநீர் பீறிட்டு வெளியேறியது. அப்பகுதியிலுள்ள இரு வீடுகளுக்குள் கழிவு நீர் புகுந்தது. தொடர்ந்து சுமார் ஒரு கி.மீ. தூரம் ஓடி கழிவுநீர் அங்குள்ள ஓடைக்கு சென்றது. 100வது வார்டு கவுன்சிலர் கார்த்திகேயன், பராமரிப்பு பணி மேற்கொள்ளும் நிறுவனத்திற்கு தகவல் தெரிவித்தார்.
இதையடுத்து கழிவுநீர் செல்வது நிறுத்தப்பட்டது. உடைப்பை சீரமைக்கும் பணி துவங்கியது.
