/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தொழில் கடன் பெற்று தருவதாக மோசடி; பாதிக்கப்பட்டோர் போலீசில் புகார்
/
தொழில் கடன் பெற்று தருவதாக மோசடி; பாதிக்கப்பட்டோர் போலீசில் புகார்
தொழில் கடன் பெற்று தருவதாக மோசடி; பாதிக்கப்பட்டோர் போலீசில் புகார்
தொழில் கடன் பெற்று தருவதாக மோசடி; பாதிக்கப்பட்டோர் போலீசில் புகார்
ADDED : செப் 18, 2025 09:35 PM

பொள்ளாச்சி; பொள்ளாச்சி அருகே, மானியத்துடன் தொழில் கடன் வாங்கி தருவதாக கூறி, பணம் வசூலித்து ஏமாற்றிய பெண்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என, ஏ.எஸ்.பி. அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு மனு கொடுத்தனர்.
பொள்ளாச்சி வடக்கிபாளையம், ஊஞ்சவேலாம்பட்டியை சேர்ந்த இரண்டு பெண்கள், மானியத்தில் கடன் வாங்கி தருவதாக கூறி ஏமாற்றி விட்டதாக, பாதிக்கப்பட்ட பொதுமக்கள், ஏ.எஸ்.பி. அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு கொடுத்தனர்.
பொதுமக்கள் கூறியதாவது:
வடக்கிப்பாளையம், ஊஞ்சவேலாம்பட்டியை சேர்ந்த, இரண்டு பெண்கள், பொள்ளாச்சி சுற்று வட்டார பகுதியில் கிராமம், கிராமமாக சென்று, இரண்டு லட்சம் ரூபாய் முதல், 10 லட்சம் ரூபாய் வரை மானியத்துடன் தொழில் கடன் பெற்று தருவதாக கூறியுள்ளனர்.
திப்பம்பட்டி, கெடிமேடு உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த கூலித்தொழிலாளர்களிடம் தலா, 7,500 ரூபாய் முதல், 31 ஆயிரம் ரூபாய் வரை முன்பணம் பெற்றனர்.
ஏழு மாதங்களாகியும் இதுவரை தொழில் கடன் பெற்று தராமல் காலம் தாழ்த்தி வருகின்றனர். பணத்தை திருப்பி கேட்டால் முறையான பதில் இல்லை. எனவே, அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனு கொடுத்துள்ளோம்.
இவ்வாறு, கூறினர்.
போலீசார் கூறுகையில், 'தொழில்கடன் பெற்று தருவதாக கூறி இரு பெண்கள் முன்பணம் பெற்று, பலரிடம் மோசடி செய்துள்ளதாக புகார் பெறப்பட்டுள்ளது. ஆவணங்களை ஆய்வு செய்து, இது குறித்து விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றனர்.