/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாணவர்களுக்கு கிடைத்தது விலையில்லா சைக்கிள் 'தினமலர்' செய்தி எதிரொலி

ADDED : அக் 31, 2024 10:03 PM

வால்பாறை, ;'தினமலர்' நாளிதழ் செய்தி எதிரொலியாக, வால்பாறை பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கப்பட்டது.
வால்பாறையில், பிளஸ் 1 படிக்கும் மாணவர்களுக்கு, தமிழக அரசின் சார்பில் ஆண்டு தோறும் விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்படுகின்றன. இந்த ஆண்டு, மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள் வழங்க, கடந்த மாதம் வால்பாறை தாலுகாவில் உள்ள ஐந்து மேல்நிலைப்பள்ளிகளுக்கு சைக்கிள்கள் கொண்டு வரப்பட்டன.
ஒரு மாதத்திற்கு மேலாகியும் மாணவர்களுக்கு சைக்கிள் வழங்கப்படாமல், எம்.பி., வருகைக்காக காத்திருப்பதால், சைக்கிள் துருபிடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது பற்றி, கடந்த, 28ம் தேதி 'தினமலர்' நாளிதழ் 'ரிப்போர்ட்டார் லீக்ஸ்' பகுதியில் செய்தி வெளியானது.
இதனையடுத்து, மாணவர்களுக்கு சைக்கிள் வழங்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டது. பொள்ளாச்சி எம்.பி., ஈஸ்வரசாமி, வால்பாறை அரசு மேல்நிலைப்பள்ளியில் நேற்று முன்தினம் நடந்த விழாவில், மாணவ, மாணவியருக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கினார். விழாவில், நகராட்சித்தலைவர் அழகுசுந்தரவள்ளி, தி.மு.க., நகர செயலாளர் சுதாகர், பள்ளி தலைமை ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.