UPDATED : நவ 27, 2026 07:22 PM
ADDED : நவ 27, 2026 07:22 PM

அ நிறம் | அளவு
பொள்ளாச்சி: லயன்ஸ் கிளப் இன்டர் நேஷனல் பொள்ளாச்சி சார்பில், உலக சர்க்கரை நோய் தினத்தை முன்னிட்டு இலவச சர்க்கரை கண்டுபிடிப்பு முகாம், அருட்செல்வர் மகாலிங்கம் சாலையில் நடந்தது.
லயன்ஸ் கிளப் தலைவர் விஜயகுமார் தலைமை வகித்து, முகாமினை துவக்கி வைத்தார். முகாமில், ரத்த சர்க்கரை பரிசோதனை, ஆலோசனை, ஆரோக்கிய வழிகாட்டுதல் வழங்கப்பட்டது.
மேலும், சர்க்கரை நோய் வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில், மக்கள் ரத்த பரிசோதனை செய்து, சர்க்கரை நோய் உள்ளதா என தெரிந்து கொண்டனர்.
முகாமில், 180க்கும் மேற்பட்டோர் பரிசோதனை செய்தததாக லயன்ஸ் கிளப் நிர்வாகிகள் தெரிவித்தனர். செயலாளர் இளங்கோவன், அட்மின் செயலாளர் வில்சன், முன்னாள் தலைவர்கள் பங்கேற்றனர்.
