ADDED : ஆக 26, 2026 05:32 PM
அ நிறம் | அளவு
அன்னூர்: பசூரில் வரும், 29ம் தேதி இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெறுகிறது.
கோவை மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம், சிறுமுகை லயன்ஸ் கிளப் மற்றும் மேட்டுப்பாளையம் இமானுவேல் கண் நோய் நிவாரண குழு சார்பில், பசூர் ஆதிதிராவிடர் நல உயர்நிலைப் பள்ளியில், வரும் 29ம் தேதி காலை 8:00 மணி முதல், மதியம் 1:00 மணி வரை, இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெறுகிறது.
தூரப்பார்வை, கண்ணில் நீர் வடிதல், கண் புரை, கண்ணில் நீர்பை அடைப்பு மற்றும் கண் தொடர்பான நோய்களுக்கு இலவசமாக பரிசோதனை செய்யப்பட்டு, சிகிச்சை அளிக்கப்படும்.
அறுவை சிகிச்சை தேவை உள்ளவர்கள், ஆதார் கார்டு நகல் அல்லது வாக்காளர் அடையாள அட்டை நகல் எடுத்து வர வேண்டும். அறுவை சிகிச்சை, தங்குமிடம், உணவு, போக்குவரத்து அனைத்தும் இலவசம் என, நிர்வாகிகள் தெரிவித்தனர்.
