/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பள்ளி மாணவர்களுக்கு இலவச கண் கண்ணாடி
/
பள்ளி மாணவர்களுக்கு இலவச கண் கண்ணாடி
ADDED : நவ 26, 2024 07:47 PM

கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு வட்டாரத்தில் கண் குறைபாடு உள்ள மாணவர்களுக்கு, இலவச கண் கண்ணாடி வழங்கப்பட்டது.
அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களின் கண் குறைபாட்டை அறிந்து, சரி செய்யும் வகையில் தமிழக அரசு சார்பில் 'கண்ணொளி காப்போம்' திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் வாயிலாக, கிணத்துக்கடவு வட்டாரத்தில் உள்ள, 27 அரசு பள்ளியில் கல்வி பயிலும், 4,544 மாணவர்களுக்கு கண் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதில், கண்பார்வை குறைபாடுடன், 273 மாணவர்கள் இருந்தனர். இதைத்தொடர்ந்து 'கண்ணொளி காப்போம்' திட்டத்தின் வாயிலாக அவர்களுக்கு அரசு சார்பில் இலவச கண் கண்ணாடி வழங்கப்பட்டது.
இதில், கிணத்துக்கடவு அரசு பள்ளியில் நேற்று, 95 மாணவர்களுக்கு கண் கண்ணாடி வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், கிணத்துக்கடவு வட்டார மருத்துவ அலுவலர் ஆக்னஸ் கோல்டா, வட்டார கண் மருத்துவ உதவியாளர் வனராஜபெருமாள், பள்ளி தலைமை ஆசிரியர் தேன்மொழி, மருத்துவ அலுவலர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.