
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேட்டுப்பாளையம், : மேட்டுப்பாளையம் உழவர் சந்தை பின்புறம் உள்ள, ஸ்ரீ கோதண்டபாணி பஜனை கோவிலில், அக்கோவிலின் பஜனை சங்கம் மற்றும் ஸ்ரீ அட்சயம் அறக்கட்டளை சார்பில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.
இதில், பொது மருத்துவம், மகளிர் நலம், குழந்தைகள் நலம், தோல், எலும்பு, கண், உள்ளிட்ட பல்வேறுதுறை சார்ந்த சிகிச்சைகள் தொடர்பான ஆலோசனையை, கோவை பி.எஸ்.ஜி மருத்துவமனை சிறப்பு மருத்துவர்கள், கோவிலுக்கு வந்த பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கினர்.
மேலும் முகாமில் கலந்து கொண்ட அனைவருக்கும், ரத்த அழுத்த பரிசோதனை, சர்க்கரை பரிசோதனை, மேற்கொள்ளப்பட்டது. அங்கேயே மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டன. ---