/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கலெக்டர் அலுவலக வளாகத்தில் இலவச 'பார்க்கிங்' வசதி பாதுகாப்பு கேள்விக்குறி

ADDED : டிச 10, 2024 11:57 PM

கோவை; கலெக்டர் அலுவலகத்திலுள்ள பார்க்கிங் ஏரியாவை, அலுவலகம் சாராத வெளி ஆட்கள் பயன்படுத்துவது அதிகரித்துள்ளது.
கோவை கலெக்டர் அலுவலகம், சுமார் ஒன்னே முக்கால் ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. அன்றாடம் ஏராளமானோர் வருகை தருகின்றனர். இது தவிர ஆய்வுக்கூட்டம், துறை அதிகாரிகளுக்கான கூட்டம் என்று அன்றாடம் ஏதாவது ஒரு நிகழ்ச்சி நடந்து கொண்டே இருக்கும்.
அதில் பங்கேற்பவர்கள் வரும் வாகனங்களை நிறுத்துவதற்காக, பிரம்மாண்ட பார்க்கிங் ஏரியா உள்ளது.
பார்க்கிங்கை வெளிஆட்கள் பலரும் பகிரங்கமாக பயன்படுத்துவதால், இங்கு பணிபுரிவோரின் வாகனங்களை நிறுத்த இடமில்லாத நிலை ஏற்படுகிறது.
ரயில்வே ஸ்டேஷனுக்கு வருவோர், லாட்ஜ்களில் தங்க வருபவர்கள், ஓட்டலுக்கு வருவோர், வெளியூருக்கு ரயிலில் செல்வோர்... என்று பலரும், கலெக்டர் அலுவலக பார்க்கிங்கை தவறாக பயன்படுத்துகின்றனர். இதனால் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது.
இப்பிரச்னைக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும் என்று, கலெக்டர் அலுவலக பணியாளர்கள் வலியுறுத்துகின்றனர்.