/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தையல் இலவச பயிற்சி வரும் 19ம் தேதி துவக்கம்
/
தையல் இலவச பயிற்சி வரும் 19ம் தேதி துவக்கம்
ADDED : மே 17, 2025 01:25 AM
கோவை : பெண்களுக்கு, சான்றிதழுடன் கூடிய தையல் இலவச பயிற்சி, வரும் 19ம் தேதி துவங்குகிறது.
பெரியநாயக்கன்பாளையம் புதுப்புதுாரில் உள்ள கனரா வங்கி கிராமப்புற சுய வேலை வாய்ப்பு பயிற்சி நிலையம் சார்பில், ஆண்கள் மற்றும் பெண்களுக்கு பல்வேறு, இலவச பயிற்சிகள் வழங்கப்படுகிறது. ஒரு கட்டமாக, பெண்களுக்கான தையல் இலவச பயிற்சி, வரும் 19ம் தேதி துவங்குகிறது. ஒரு மாத பயிற்சி காலை 9:30 மணி முதல் மாலை 5:30 வரை வழங்கப்படுகிறது.
பயிற்சியில் பங்கேற்போருக்கு, 19 முதல் 45 வயதுக்குள் இருக்க வேண்டும். கோவை மாவட்ட ஆதார் முகவரி இருக்க வேண்டும். பயிற்சியின் போது, தேநீர், மதிய உணவு மற்றும் பயிற்சிக்கான உபகரணங்கள் வழங்கப்பட உள்ளன. முடிவில், அரசு சான்றிதழ், தொழில் துவங்க, வங்கிக் கடன் ஆலோசனை வழங்கப்பட உள்ளன.
தவிர, வரும் வாரத்தில், போட்டோ பிரேமிங் மற்றும் டேலி கோர்ஸ் பயிற்சியும் வழங்கப்பட உள்ளது. இதற்கும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தொடர்புக்கு: 94890 43926.