தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ இலவச தையல் பயிற்சி நிறைவு

 இலவச தையல் பயிற்சி நிறைவு

 இலவச தையல் பயிற்சி நிறைவு


ADDED : டிச 19, 2025 05:04 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 19, 2025 05:04 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள தேசிய மனித மேம்பாட்டு மையம், கோவை கேலக்ஸி ரோட்டரி சங்கத்துடன் இணைந்து பல்வேறு தொழில் பயிற்சிகளை இலவசமாக வழங்கி வருகிறது. இங்கு பயிற்சி முடித்த, 40 பெண்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

அனைவரையும் மையத்தின் ஒருங்கிணைப்பாளர் சரசு வரவேற்றார். கேலக்ஸி ரோட்டரி சங்க தலைவர் வெங்கடேஷ், புதிய பயிற்சி வகுப்புகளை துவக்கி வைத்தார். மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் சித்தேந்திரன், சுயதொழில் செய்பவர்களுக்கு தற்போது வங்கி கடன் வழங்கப்படும் விவரங்கள் பற்றி எடுத்து கூறினார்.

நிதி சார் கல்வி ஆலோசகர் ரவி, சுய தொழில் செய்யும் பெண்களுக்கு அரசு வழங்கும் பல்வேறு சலுகைகள் குறித்து விளக்கினார். தேசிய மனித மேம்பாட்டு மையத்தின் இயக்குனர் சகாதேவன் நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us