/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வேலைவாய்ப்பு துறை சார்பில் இலவச பயிற்சி மையம்
/
வேலைவாய்ப்பு துறை சார்பில் இலவச பயிற்சி மையம்
ADDED : பிப் 05, 2025 12:21 AM
பெ.நா.பாளையம்; பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள யு.ஐ.டி., கலை, அறிவியல் கல்லூரியில் இலவச டி.என்.பி.எஸ்.சி., பயிற்சி மையம் துவக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் கீழ் இயங்கும், கோவை ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கான பயிற்றுவிப்பு மற்றும் வழிகாட்டும் நிலையம் சார்பில், தோலாம்பாளையம், வெள்ளியங்காடு மற்றும் பாலமலை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த பழங்குடியின மக்கள் பயன் பெறும் வகையில், பெரியநாயக்கன்பாளையம் அருகே கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட கவுண்டம்பாளையத்தில் உள்ள யு. ஐ.டி., கலை, அறிவியல் கல்லூரியில் இலவச கட்டணமில்லா டி.என்.பி.எஸ்.சி., பயிற்சி மையம் துவக்கப்பட்டு உள்ளது. இங்கு பயிற்சி வகுப்புகள் வார விடுமுறை நாட்களான சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் தொடர்ச்சியாக நடத்தப்படும்.
பயிற்சி வகுப்பில், ஆதிதிராவிடர், பழங்குடியினர் வகுப்பினத்தை சேர்ந்த மாணவர்கள் மட்டுமல்லாது, பிற மாணவர்களும் கலந்து கொண்டு பயன் பெறலாம். பயிற்சியில் சேர விருப்பம் உள்ள மாணவர்கள், 94990 55939 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பதிவு செய்து கொள்ளலாம்.
பயிற்சி வகுப்பு குறித்து, மேலும் விபரங்களுக்கு கோவை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் உள்ள கோவை ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கான பயிற்றுவிப்பு மற்றும் வழிகாட்டு நிலையத்தை தொடர்பு கொள்ளலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.