/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வேளாண் இயந்திரம் செயல்விளக்கம் இளைஞர்களுக்கு இலவச பயிற்சி
/
வேளாண் இயந்திரம் செயல்விளக்கம் இளைஞர்களுக்கு இலவச பயிற்சி
வேளாண் இயந்திரம் செயல்விளக்கம் இளைஞர்களுக்கு இலவச பயிற்சி
வேளாண் இயந்திரம் செயல்விளக்கம் இளைஞர்களுக்கு இலவச பயிற்சி
ADDED : டிச 08, 2025 05:11 AM
கோவை: கோவை மாவட்ட வேளாண் பொறியியல் துறை உதவி செயற்பொறியாளர் ராஜீவ்காந்தி அறிக்கை:
தமிழக அரசின் வேளாண் பொறியியல் துறையின் இயந்திர கலப்பை பணிமனை, பி.என்.புதூரில் உள்ளது. இங்கு, வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ், வேளாண் இயந்திரங்கள் செயல்விளக்கப் பயிற்சி வரும் 10ம் தேதி முதல் இலவசமாக வழங்கப்படுகிறது. பங்கேற்க, 18 முதல் 35 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
விவசாயத்தில் ஆட்கள் பிரச்னையை சமாளிக்கவும், வேலை நேரத்தைக் குறைக்கவும், இயந்திரங்கள் துணையாக உள்ளன. வேளாண் இயந்திரங்களில் ஏற்படும் பழுதுகளை சரி செய்து, பராமரிக்க இளைஞர்களுக்கு பயிற்சி அளிப்பதன் வாயிலாக, சிறு பழுதுகளை பணித்தளத்திலேயே நிவர்த்தி செய்ய முடியும்.
இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பும் கிடைக்கும். பயிற்சியில் பங்கேற்க விரும்புவோர், 94429 73111 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு, அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.