/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
உணவு பதப்படுத்த இலவச பயிற்சி
/
உணவு பதப்படுத்த இலவச பயிற்சி
ADDED : ஜன 05, 2026 05:15 AM
கோவை: எம்.எஸ்.எம்.இ., தொழில்நுட்ப மேம்பாட்டு மையம் சார்பில், ஐந்து நாட்கள் உணவு பதப்படுத்துதல், பாதுகாத்தல் பயிற்சி அறிவிக்கப்பட்டுள்ளது. பயிற்சியை, வடவள்ளி ராமசாமி சின்னம்மாள் அறக்கட்டளை இணைந்து நடத்துகிறது.
பயிற்சியில், சிறுதானிய மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள், பதப்படுத்தப்பட்ட பழம், காய்கறி, ஊறுகாய் தயாரிப்பு, பேக்கரி பொருட்கள் தயாரிப்பு குறித்து செயல்முறையில் விளக்கம் அளிக்கப்படவுள்ளது.
தொழில் துவங்குவதற்கான அரசின் திட்டங்கள், மானியங்கள், சந்தைப்படுத்துதல் உள்ளிட்ட அனைத்து பயிற்சியும் அளிக்கப்படவுள்ளது. இப்பயிற்சி, 19 ம் தேதி முதல் 23ம் தேதி வரை ஐந்து நாட்கள் நடைபெறும்.
முன்பதிவு, விவரங்களுக்கு 96007 76611/ 99447 99995 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம்.

