/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நாட்டுக்கோழி வளர்க்க இலவச பயிற்சி
/
நாட்டுக்கோழி வளர்க்க இலவச பயிற்சி
ADDED : மே 17, 2025 05:01 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை : கால்நடை மருத்துவ பல்கலை மற்றும்ஆராய்ச்சி மையம் சார்பில், மே மாதத்திற்கான கால்நடை வளர்ப்பு பயிற்சி அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, வரும் 23ம் தேதி நாட்டுக்கோழி வளர்ப்பு பயிற்சி அளிக்கப்படவுள்ளது. நாட்டுக்கோழியின் ரகங்கள், நோய் மேலாண்மை, டென்ட் அமைப்பு, கோடைக்கால பராமரிப்பு,லாபமான முறையில் நாட்டுக்கோழி விற்பனை உள்ளிட்டவை குறித்து, பயிற்சி அளிக்கப்படவுள்ளது.
பயிற்சி, காலை 10:30 முதல் மாலை, 5:00 மணி வரை நடைபெறும். விபரங்களுக்கு, 0422-2669965 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
இத்தகவலை, சரவணம்பட்டியில் அமைந்துள்ள கால்நடை மருத்துவ பல்கலை மற்றும் ஆராய்ச்சி மைய தலைவர் ஆறுமுகம் தெரிவித்தார்.