UPDATED : அக் 06, 2026 11:20 PM
ADDED : அக் 06, 2026 08:00 PM
மேட்டுப்பாளையம்: சிறு தானியத்தில் உணவுப் பொருட்கள் தயாரிக்க, ஒரு மாதம் இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது.
மத்திய அரசின், இந்திய தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் நடக்கும் பயிற்சியில், சிறுதானியத்தில் தயாரிக்கப்படும் உணவுப் பொருட்கள் குறித்து பெண்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. பல்வேறு தொழில் வாய்ப்புகள், சந்தைப்படுத்துதல், திட்ட அறிக்கை தயாரித்தல், மத்திய, மாநில அரசுகளின் பல்வேறு மானிய திட்டங்கள் குறித்து பயிற்சி அளிக்கப்பட உள்ளது. பயிற்சி முடித்தவர்களுக்கு மத்திய அரசின் சான்றிதழ் வழங்கப்படும்.
'ஆர்வமுள்ளவர்கள் 7738850094 என்ற எண்ணில், குறுஞ்செய்தி வாயிலாக முன்பதிவு செய்யலாம்' என, இந்திய தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்ட ஒருங்கிணைப்பாளர் ரஞ்சித் குமார் அறிக்கையில் கூறியுள்ளார்.
