/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இலவச தொழில் பயிற்சி சேர்க்கை துவக்கம்
/
இலவச தொழில் பயிற்சி சேர்க்கை துவக்கம்
ADDED : நவ 24, 2024 11:42 PM
பெ.நா.பாளையம்; பெரியநாயக்கன்பாளையத்தில் இலவச தொழில் பயிற்சிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள தேசிய மனித மேம்பாட்டு மையம் மற்றும் கோவை கேலக்ஸி ரோட்டரி சங்கம் ஆகியன இணைந்து பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களுக்காக பல்வேறு தொழில் பயிற்சிகளை இலவசமாக வழங்கி வருகிறது.
இங்கு தையல் பயிற்சி, 4 மாதம், ஆரி எம்பிராய்டரி, 2 மாதம், வீட்டு மின் சாதனங்கள் பழுதுபார்த்தல், 4 மாதம், கைவினைப் பொருட்கள் தயாரித்தல், 15 நாட்கள், மொபைல் போன் பழுது பார்த்தல், 15 நாட்கள் உள்ளிட்ட பயிற்சிகள் இலவசமாக வழங்கப்படுகின்றன.
சுய தொழில் செய்ய விரும்பும் இளைஞர்கள், சுய உதவி குழுவினர், படிப்பை மேற்கொண்டு தொடர இயலாதவர்கள் இப்பயிற்சியில் பங்கேற்று பயன் பெறலாம். பயிற்சி வகுப்புகள் தேர்ந்த வல்லுனர்களை கொண்டு நடத்தப்படுகிறது.
செய்முறை பயிற்சிக்கு அதிக நேரம் ஒதுக்கப்படும். நேரடியாக பணியில் ஈடுபட செய்தும், பயிற்சி அளிக்கப்படும். பயிற்சியாளருக்கு வாழ்க்கை கல்வி பயிற்சியும் சேர்த்து வழங்கப்படும்.
பயிற்சியை முழுமையாக நிறைவு செய்யும் நபர்களுக்கு சான்றிதழ், வேலை வாய்ப்புக்கும் ஏற்பாடு செய்யப்படும். சுயதொழில் செய்ய விரும்புவோருக்கு தொழில் துவங்க தேவையான ஆலோசனைகள், வங்கி கடன் பெறுவதற்கான ஆலோசனைகளும் வழங்கப்படும்.
பயிற்சியில் சேர விரும்புபவர்கள், ஆதார் கார்டு நகல், படிப்பு சான்றிதழ், 2 பாஸ்போர்ட் அளவு போட்டோ ஆகியவற்றுடன் உடனடியாக பயிற்சி ஒருங்கிணைப்பாளர், தேசிய மனித மேம்பாட்டு மையம், குப்பிச்சிபாளையம் ரோடு, பெரியநாயக்கன்பாளையம், 81223 22381 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
இத்தகவலை மையத்தின் இயக்குனர் சகாதேவன் தெரிவித்தார்.