/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சர்வீஸ் ரோட்டில் அடிக்கடி விபத்து
/
சர்வீஸ் ரோட்டில் அடிக்கடி விபத்து
ADDED : செப் 15, 2025 09:31 PM
கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு சர்வீஸ் ரோட்டில் செக்போஸ்ட் அருகே அடிக்கடி வாகன விபத்து ஏற்படுகிறது.
கிணத்துக்கடவு சர்வீஸ் ரோட்டில் நாள்தோறும் ஆயிரக்கணக்கில் வாகனங்கள் செல்கின்றன. இந்த ரோட்டின் இருபுறமும், ஏராளமான கடைகள், வணிக வளாகங்கள், மருத்துவமனைகள் அமைந்துள்ளன.
இதில், செக்போஸ்ட் அருகே அதிகளவில் வாகனங்கள் பார்க்கிங் செய்யப்படுவதால், அப்பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அப்பகுதியில் உள்ள கடைகளுக்கு பொருட்களை ஏற்றி, இறக்கிச் செல்ல லாரி, டெம்போ உள்ளிட்ட பெரிய அளவிலான வாகனங்கள் நின்று செல்வதால், இந்த ரோட்டில் பயணிப்பதில் சிரமம் ஏற்படுகிறது.
கனரக வாகனங்கள் மற்றும் பஸ் போன்ற வாகனங்கள் ரோட்டில் பயணிக்கும் போது, கடை முன்பாக பார்க்கிங் செய்யப்பட்டிருக்கும் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் உரசி விபத்து ஏற்படுகிறது.
எனவே, ரோட்டோரம் பார்க்கிங் செய்யும் வாகனங்களை கட்டுப்படுத்த போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.