/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இளநீர் பண்ணை விலை 45 ரூபாயாக நிர்ணயம்
/
இளநீர் பண்ணை விலை 45 ரூபாயாக நிர்ணயம்
ADDED : ஆக 17, 2025 09:54 PM
பொள்ளாச்சி; பொள்ளாச்சி, ஆனைமலை தாலுகா பகுதியில், இளநீர் பண்ணை விலையில் எவ்வித மாற்றமும் இல்லாமல் கடந்த வார விலையே நீடிக்கிறது.
ஆனைமலை இளநீர் உற்பத்தியாளர் சங்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீனிவாசன் கூறியதாவது:
இந்த வாரம் நல்ல தரமான குட்டை நெட்டை வீரிய ஒட்டு இளநீரின் விலை கடந்த வார விலையில் எவ்வித மாற்றமும் இன்றி, 45ரூபாயாக நிர்ணயம் செய்யப்படுகிறது. ஒரு டன் இளநீரின் விலை, 18,500 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தற்போது இளநீருக்கு நல்ல தேவை உள்ளது. வடமாநிலங்களில் இருந்து புதிது, புதிதாக இளநீர் நிறுவனங்களும், வியாபாரிகளும் நமது பகுதியில் இளநீரை கொள்முதல் செய்ய வருகின்றனர்.
குறிப்பாக பச்சை இளநீருக்கு நல்ல கிராக்கி உள்ளது. வியாபாரிகள் பெரும்பாலான தோப்புகளில் இளநீரை முன்கூட்டியே அறுவடை செய்ய முனைப்பு காட்டுகின்றனர். எடைக்கு விற்பனை செய்யும் விவசாயிகள், 37 நாட்களுக்கு பின்னர் இளநீரை அறுவடை செய்யவும்.
இல்லையெனில் எடை குறைவாக வந்து விவசாயிகளுக்கு இழப்பு ஏற்படும். இளநீரை எடைக்கு விற்பனை செய்யும் போது எடையில் எந்தவிதமான கழிவும் செய்ய வேண்டியது இல்லை. இளநீரை குறைந்த விலைக்கு விற்பனை செய்யாமல் வியாபாரிகளிடம் நல்ல விலை கேட்டு பெறவும்.
இவ்வாறு, அவர் தெரிவித்தார்.