/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இளநீர் பண்ணை விலை ஒரு ரூபாய் குறைப்பு
/
இளநீர் பண்ணை விலை ஒரு ரூபாய் குறைப்பு
ADDED : செப் 29, 2025 10:19 PM
பொள்ளாச்சி:
பொள்ளாச்சி, ஆனைமலை தாலுகா பகுதியில், இளநீர் பண்ணை விலை கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் ஒரு ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது.
ஆனைமலை இளநீர் உற்பத்தியாளர் சங்கத்தின், தலைமை ஒருங்கிணைப்பாளர் சீனிவாசன் கூறியதாவது:
இந்த வாரம், குட்டை நெட்டை வீரிய ஒட்டு இளநீர் விலை, கடந்த வார விலையை ஒப்பிடுகையில், ஒரு ரூபாய் குறைக்கப்பட்டு, 39 ரூபாய் என நிர்ணயம் செய்யப்படுகிறது. அதன்படி, ஒரு டன் இளநீரின் விலை, 16,750 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இளநீர் வரத்து கணிசமாக உயர்வு, வட மாநிலங்களில் நிலவும் சீதோஷ்ண நிலை மாற்றம் காரணமாக, விலை குறைக்கப்பட்டுள்ளது.
பொள்ளாச்சி பகுதிகளில் தற்போது, ஈரியோபைட் சிலந்திப் பூச்சி தாக்குதல் அதிகமாக உள்ளது. உரிய தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். பூச்சி தாக்குதலுக்கு சாதகமான பருவநிலை உள்ளதால் இளநீரின் தரமும் குறையும் வாய்ப்புள்ளது.
இவ்வாறு, கூறினார்.