/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
போதையில்லா கோவை உருவாக்க 'நண்பன்' அறக்கட்டளை துவக்கம்
/
போதையில்லா கோவை உருவாக்க 'நண்பன்' அறக்கட்டளை துவக்கம்
போதையில்லா கோவை உருவாக்க 'நண்பன்' அறக்கட்டளை துவக்கம்
போதையில்லா கோவை உருவாக்க 'நண்பன்' அறக்கட்டளை துவக்கம்
ADDED : பிப் 16, 2025 11:54 PM
கோவை; கோவையில் போதை இல்லாத சமுதாயத்தை உருவாக்கும் விதமாக, நண்பன் அறக்கட்டளை துவங்கப்பட்டுள்ளது.
'போதையில்லா கோவை; வலிமையான கோவை' என்பதை நோக்கமாக கொண்டு, காந்திபுரம், கிராஸ்கட் ரோடு ஐந்தாவது வீதியில், நண்பன் அறக்கட்டளை நேற்று துவங்கப்பட்டது.
இந்த அறக்கட்டளை, பள்ளி, கல்லுாரிகளில் விழிப்புணர்வு பிரசாரம், போதைக்கு அடிமையானவர்களை மீட்டு மறுவாழ்வு அளிப்பது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளது.
அறக்கட்டளை தலைவர் சிவ கணேஷ் கூறியதாவது:
இளம் தலைமுறையினர் போதை பழக்கத்துக்கு அடிமையாகி வருகின்றனர். இவ்வாறு, அடிமையாகும் இளைஞர்களுக்கு கவுன்சிலிங் வழங்க உள்ளோம். போதை பொருட்கள் விற்பனை குறித்து எங்கள் கவனத்துக்கு வந்தால், போலீசாருக்கு தகவல் தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படும்.
பள்ளி, கல்லுாரி மாணவர்களிடம் போதைக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்தவுள்ளோம். போதை எனும் சாக்கடையில் விழாமல், ஆக்கப்பூர்வமான பணியிலும், விளையாட்டிலும் கவனம் செலுத்துமாறு, மாணவர்களிடம் அறிவுறுத்துவோம். தற்போது, கோவை மாவட்டத்தில், 150 பேர் உறுப்பினர்களாக உள்ளனர்.
போதை சீரழிவில் இருந்து, கோவையை மீட்டெடுக்க போலீசாருடன் இணைந்து செயல்படவுள்ளோம். எங்களை, 97896 48352 என்ற எண்ணில், 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு, அவர் கூறினார்.