/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பழைய குற்றவாளிகள் முதல் ஆன்லைன் விற்பனை வரை சல்லடை சோதனை! 'ஸ்மார்ட் காக்கீஸ்' திட்டத்துக்கு பொதுமக்கள் வரவேற்பு
/
பழைய குற்றவாளிகள் முதல் ஆன்லைன் விற்பனை வரை சல்லடை சோதனை! 'ஸ்மார்ட் காக்கீஸ்' திட்டத்துக்கு பொதுமக்கள் வரவேற்பு
பழைய குற்றவாளிகள் முதல் ஆன்லைன் விற்பனை வரை சல்லடை சோதனை! 'ஸ்மார்ட் காக்கீஸ்' திட்டத்துக்கு பொதுமக்கள் வரவேற்பு
பழைய குற்றவாளிகள் முதல் ஆன்லைன் விற்பனை வரை சல்லடை சோதனை! 'ஸ்மார்ட் காக்கீஸ்' திட்டத்துக்கு பொதுமக்கள் வரவேற்பு
ADDED : செப் 07, 2025 09:25 PM

மேட்டுப்பாளையம்: கோவை மாவட்ட பகுதிகளில், 'ஸ்மார்ட் காக்கீஸ்' போலீசார் 24 மணி நேரமும் ரோந்து சென்று குற்றச் சம்பவங்களை தடுத்து வருகின்றனர். பழைய குற்றவாளிகள் முதல் ஆன்லைன் போதைப் பொருள் விற்பனை வரை, தொடர்ந்து கண்காணிப்படுகிறது.
கோவை புறநகர் பகுதிகளில், 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் வகையில் 'ஸ்மார்ட் காக்கீஸ்' திட்டத்தை, ரூரல் எஸ்.பி., கார்த்திகேயன் சமீபத்தில் துவக்கிவைத்தார். அதன்படி, மேட்டுப்பாளையம் உட்கோட்டத்துக்கு உட்பட்ட மேட்டுப்பாளையம், காரமடை, சிறுமுகை மற்றும் அன்னூர் போலீஸ் ஸ்டேஷன்களில், மொத்தம் ஆறு ரோந்து நவீன பைக்குகளில், 12 போலீசார் இப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதில் மேட்டுப்பாளையம் மற்றும் அன்னூர் போலீஸ் ஸ்டேஷன்களுக்கு தலா இரண்டு பைக்குகள் வழங்கப்பட்டுள்ளன. கொள்ளை, கொலை, வழிப்பறி உள்ளிட்ட குற்றங்கள் நடைபெறாமல் இருக்க போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தொடர் ரோந்தில் இருப்பர்.
தெருக்களில் உள்ள குறுகிய சந்துகளில் எல்லாம் பைக்குகளில் ரோந்து செல்வதால் பெரும்பாலான குற்றச்சம்பவங்கள் தடுக்கப்பட்டுள்ளன.
ஆன்லைன் கண்காணிப்பு போலீசார் கூறியதாவது:- ஸ்மார்ட் காக்கீஸ் திட்டத்தில் பணிபுரியும் போலீசாரை மூன்று மாதங்களுக்கு வேறு பணிக்கு மாற்றுவது கிடையாது. இதனால் அவர்கள் ஏரியாக்களை நன்கு புரிந்து கொண்டு, எந்த எரியாவில் எந்த பிரச்னை வரலாம் என முன் கூட்டியே தெரிந்து வைத்து, அதற்கு ஏற்றார் போல் செயல்படுகின்றனர்.
மக்கள் போலீசாரை அழைத்தவுடன், ஸ்டேஷன் போலீசார் செல்வதற்குள், ஸ்மார்ட் காக்கீஸ் போலீசார் உடனடியாக களத்துக்கு சென்றுவிடுகின்றனர். பழைய குற்றவாளிகள் தொடர்ந்து கண்காணிக்கப்படுகின்றனர்.
கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள் விற்பனை தடுப்பில் பெரிதும், ஸ்மார்ட் காக்கீஸ் பங்கு வகிக்கின்றனர். ஆன்லைன் வாயிலாக போதைப்பொருள் விற்பனை செய்யப்படுகிறதா என கூரியர் நிறுவனங்கள் செயல்பாடுகளும் கண்காணிக்கப்படுகின்றன. பள்ளி, கல்லூரிகளுக்கு சென்று போதைப்பொருள் பயன்பாட்டால் ஏற்படும் தீமைகள் குறித்தும் மாணவர்களுக்கு தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்துக்கின்றனர். இதனால் மக்களிடையே ஸ்மார்ட் காக்கீஸ் திட்டத்திற்கு மிகுந்த வரவேற்பு கிடைத்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.-------