UPDATED : அக் 06, 2026 10:10 PM
ADDED : அக் 06, 2026 07:14 PM

அ நிறம் | அளவு
உடுமலை: வரத்து குறைவால், பொரியல் தட்டை சந்தைகளில் விலை அதிகரித்து வருகிறது.
உடுமலை எலையமுத்துார் சுற்றுப்பகுதிகளில், கிணற்று பாசனத்துக்கு பொரியல் தட்டை சாகுபடி செய்யப்படுகிறது. கேரளாவில், பொரியல் தட்டை அதிகளவில் விற்பனையாகிறது.
வறட்சி காரணமாக, இந்த சீசனில் குறைந்த பரப்பளவிலேயே பொரியல் தட்டை சாகுபடியாகியுள்ளது. இதனால், சந்தைக்கு வரத்து குறைந்து, கிலோ, 20 ரூபாயில் இருந்து, 35 ரூபாயாக விலை உயர்ந்துள்ளது.
