/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கே.எம்.சி.எச்.ல் முழு உடல் பரிசோதனை முகாம்
/
கே.எம்.சி.எச்.ல் முழு உடல் பரிசோதனை முகாம்
ADDED : பிப் 27, 2026 06:37 AM

'3 5 வயதிற்கு மேற்பட்ட ஆண்கள், பெண்கள் முழு உடல் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்,' என, கோவை மெடிக்கல் சென்டர் மருத்துவமனை முழு உடல் பரிசோதனை மைய மருத்துவ ஆலோசகர் டாக்டர் ஜோசப் தெரிவித்தார்.
மேலும் அவர் கூறியதாவது:
தற்போதைய பரபரப்பான வாழ்க்கை முறையில் உணவு மற்றும் உடல் நலனில் அக்கறை செலுத்த பலருக்கும் நேரம் இருப்பதில்லை. அதனால், ஏதாவது ஒரு நோய் தாக்குதல் ஏற்பட்டு இயல்பு வாழ்க்கைக்கு சிக்கல் ஏற்படும்போதுதான் இவற்றுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றனர்.
சில நோய்களை முன்கூட்டியே கண்டறிவதன் வாயிலாக உடல் நலனை பாதுகாத்துக் கொள்ளலாம். சிகிச்சை எடுத்துக் கொண்டால் முழுமையாக குணமடையலாம்; உடல் வலி மற்றும் அறுவை சிகிச்சை போன்றவற்றையும் தவிர்க்கலாம். இதற்கு முழு உடல் பரிசோதனை பெரிதும் உதவுகிறது.
35 வயதிற்கு மேற்பட்ட ஆண்கள், பெண்கள் முழு உடல் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். இதன் வாயிலாக துவக்க நிலை மற்றும் முற்றிய நிலையில் உள்ள நோய்களை கண்டறிய முடியும். பல்வேறு நோய் அறிகுறி உள்ளவர்கள், நோய் இருக்கிறதா, இல்லையா என்பதை கண்டறிய விரும்புவோர், புகை பிடிப்பவர்கள், மது பழக்கம் உள்ளோர், சர்க்கரை, ரத்த அழுத்தம் உள்ளவர்கள் முழு உடல்பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
கே.எம்.சி.எச்.,ல் மேற்கொள்ளப்படும் முழு உடல் பரிசோதனையில் ரத்தம், சிறுநீர், மலம், மார்பக எக்ஸ்ரே, காது, மூக்கு, தொண்டை, பல், கண், அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன், ஈசிஜி, டிஎம்டி, எக்கோ கார்டியோகிராம், மேமோகிராம், ஆஞ்சியோகிராம் உள்ளிட்டவை பரிசோதிக்கப்படுகிறது. நோயாளியின் பழக்க வழக்கங்கள், சந்தேகங்கள், அறிகுறிகளுக்கேற்ப பரிசோதனைகள் விரிவடையும்.
மருத்துவமனையில் முழு உடல் பரிசோதனை செய்யும் 35 வயதுக்கு மேற்பட்ட தம்பதிக்கு, மார்ச் 2ம் தேதி முதல் 31ம் தேதி வரை முகாம் நடக்கிறது; கட்டணத்தில் 20 சதவீதம் சலுகை வழங்கப்படுகிறது.
முன்பதிவு மற்றும் கூடுதல் விவரங்களுக்கு, 74188 87411 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு, அவர் கூறினார்.

