/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அரசு கல்லுாரிகளை மேம்படுத்த நிதி
/
அரசு கல்லுாரிகளை மேம்படுத்த நிதி
ADDED : டிச 25, 2024 08:19 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை; தமிழகத்தில், 31 அரசு கலை, அறிவியல் கல்லுாரிகளின் உட்கட்டமைப்புகளை மேம்படுத்த, ரூ.100.15 கோடியில் பணிகள் மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில், கோவை அரசு கலைக் கல்லுாரி, தொண்டாமுத்துார் அரசு கலை, அறிவியல் கல்லுாரி, ஆகியவற்றுக்கு முறையே, ரூ.4.19 கோடி, ரூ.2.50 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிதியை கொண்டு, கோவை அரசு கலைக் கல்லுாரியில், 10 வகுப்பறைகள், தொண்டாமுத்துார் அரசு கலை, அறிவியல் கல்லுாரியில், ஆறு வகுப்பறைகள், ஒரு போர்வெல் ஏற்படுத்தப்பட உள்ளன.