/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
துக்க வீட்டில் தீ விபத்து சம்பவம்; மேலும் இருவர் உயிரிழப்பு
/
துக்க வீட்டில் தீ விபத்து சம்பவம்; மேலும் இருவர் உயிரிழப்பு
துக்க வீட்டில் தீ விபத்து சம்பவம்; மேலும் இருவர் உயிரிழப்பு
துக்க வீட்டில் தீ விபத்து சம்பவம்; மேலும் இருவர் உயிரிழப்பு
ADDED : நவ 20, 2024 10:34 PM
கோவை ; கணபதி பகுதியில் துக்க வீட்டில் ஏற்பட்ட தீ விபத்து சம்பவத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மூவரில் இருவர் உயிரிழந்தனர்.
கணபதி, கே.ஆர்.ஜி., நகரை சேர்ந்தவர் ராமலட்சுமி, 83. உடல்நலக் குறைவால் கடந்த 14ம் தேதி மாலை உயிரிழந்தார். அவரின், உடல் வைத்திருந்த 'பிரீசர் பாக்சுக்கு' மின் இணைப்பு கொடுக்கும் வகையில் ஜெனரேட்டர் வைக்கப்பட்டது. அதில் பெட்ரோல் ஊற்றிய போது தீப்பற்றி விபத்து ஏற்பட்டது.
இதில் ராமலட்சுமியின் உறவினர்கள் பத்மாவதி, 53 பானுமதி, 50, ராஜேஸ்வரன், 55 ஸ்ரீராம், 19 ஆகியோர் வீட்டிற்குள் பரவிய தீயில் சிக்கிக்கொண்டனர். சம்பவ இடத்திலேயே மருமகள் பத்மாவதி தீயில் கருகி உயிரிழந்தார். மகள் பானுமதி, மகன் ராஜேஸ்வரன் ஆகியோர் 60 சதவீதம் தீக்காயத்துடனும், ஸ்ரீராம் 30 சதவீதம் தீக்காயத்துடனும் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
மூவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், பானுமதி நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதை தொடர்ந்து, மாற்றுத்திறனாளியான ராஜேஸ்வரன் நேற்று சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். ஸ்ரீராமுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.