/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கேலோ இந்தியா 'டிராக் சைக்கிளிங்' பதக்கங்கள் அள்ளிய வீராங்கனைகள்
/
கேலோ இந்தியா 'டிராக் சைக்கிளிங்' பதக்கங்கள் அள்ளிய வீராங்கனைகள்
கேலோ இந்தியா 'டிராக் சைக்கிளிங்' பதக்கங்கள் அள்ளிய வீராங்கனைகள்
கேலோ இந்தியா 'டிராக் சைக்கிளிங்' பதக்கங்கள் அள்ளிய வீராங்கனைகள்
ADDED : நவ 13, 2024 05:37 AM

கோவை,: தேசிய அளவிலான கேலோ இந்தியா அஸ்மிதா சாம்பியன்ஷிப் டிராக் சைக்கிளிங் போட்டியில் கோவை வீராங்கனைகள் அசத்தியுள்ளனர்.
தேசிய அளவிலான கேலோ இந்தியா அஸ்மிதா சாம்பியன்ஷிப் டிராக் சைக்கிளிங் போட்டிகள் டில்லியில் இரு நாட்கள் நடந்தன. இதில், நாடு முழுவதும் இருந்து, 100க்கும் மேற்பட்ட வீராங்கனைகள் பங்கேற்றனர். கோவையில் இருந்து தன்யதா, பூஜா ஸ்வேதா ஆகியோர், 18 வயதுக்குட்பட்டோர் பிரிவில் பங்கேற்றனர்.
இதில், தன்யதா தனிநபர் 'பெர்ஸ்யுட்' மற்றும் 'ஸ்கிராட்ச் ரேஸ்' போட்டியில் தலா ஒரு வெள்ளி பதக்கமும், 'கெரின் ரேஸ்' போட்டியில் வெண்கல பதக்கமும் வென்றுள்ளார். பூஜா ஸ்வேதா கெரின் ரேஸ் போட்டியில் ஒரு வெள்ளி பதக்கமும் வென்று, கோவைக்கு பெருமை சேர்த்துள்ளனர்.
மாநில அளவிலான முதல்வர் கோப்பை டிராக் சைக்கிளிங் போட்டி, சென்னையில் நடந்தது. இதில், 'டைம் டிரையல்' போட்டியில், தன்யதா வெள்ளி பதக்கம் மற்றும் ரூ.75 ஆயிரம் பரிசுத்தொகையும், பூஜா ஸ்வேதா வெண்கல பதக்கமுடன் ரூ.50 ஆயிரம் பரிசுத்தொகையும் வென்றனர்.