sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

காந்தி ஜெயந்தி விழா; நகரில் துாய்மைப்பணி மாலை அணிவித்து மரியாதை

/

காந்தி ஜெயந்தி விழா; நகரில் துாய்மைப்பணி மாலை அணிவித்து மரியாதை

காந்தி ஜெயந்தி விழா; நகரில் துாய்மைப்பணி மாலை அணிவித்து மரியாதை

காந்தி ஜெயந்தி விழா; நகரில் துாய்மைப்பணி மாலை அணிவித்து மரியாதை


ADDED : அக் 03, 2024 05:05 AM

Google News

ADDED : அக் 03, 2024 05:05 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காந்திஜெயந்தி விழாவை முன்னிட்டு, பொள்ளாச்சி, ஒருங்கிணைந்த கோர்ட் வளாகத்தில் துாய்மை இந்தியா திட்டத்தின் கீழ், சுத்தம் செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டது. முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி பாரதிராஜன், குற்றவியல் நீதித்துறை நடுவர் எண் -- 2 நீதிபதி பிரகாசம் ஆகியோர் தலைமை வகித்தனர்.

வக்கீல்கள் சங்கத் தலைவர் துரை, இணைச் செயலாளர் செந்தில்குமார், வக்கீல்கள் மற்றும் அலுவலர்கள் ஒன்றிணைந்து கோர்ட் வளாகத்தில் உள்ள குப்பையை சேகரம் செய்தனர். மட்கும், மட்காத குப்பையை தரம் பிரித்து, நகராட்சி துாய்மைப் பணியாளர்களிடம் ஒப்படைத்தனர். இதுதவிர, வளாகத்தில் தேவையற்ற செடி, கொடிகள் அகற்றப்பட்டன.

* கோவை தெற்கு மாவட்ட காங்., சார்பில், பொள்ளாச்சி வெங்கட்ரமணன் வீதியில் தேசிய விழிப்புணர்வு நடைபயணம் மேற்கொள்ளப்பட்டது. கோவை தெற்கு மாவட்ட தலைவர் பகவதி தலைமை வகித்தார். மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் ஜோதிமணி, காளீஸ்வரன், நகர தலைவர்கள் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நடைபயணத்தை மாநில துணைத்தலைவர் கந்தசாமி துவக்கி வைத்தார். காங்., கட்சியினர் மற்றும் பொதுமக்கள் இணைந்து, வெங்கட்ரமணன் வீதி காமராஜர் பவனில் இருந்து பஸ் ஸ்டாண்ட் வழியாக நியூ ஸ்கீம் ரோடு சந்திப்பை அடைந்தனர். அங்கு, காந்தி சிலைக்கு மாலை அணிவித்தும், மலர் துாவி மரியாதை செலுத்தினர். மாநில வக்கீல் பிரிவு தலைவர் ரவி, மாநில மகளிர் காங்கிரஸ் துணைத் தலைவர் கவிதா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

* பொள்ளாச்சி சக்தி தகவல் மேலாண்மைக் கல்லுாரியில், 155வது காந்தி ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. கல்லுாரி இயக்குனர் (பொறுப்பு) சர்மிளா, தலைமை வகித்தார். தொடர்ந்து, காந்தியின் சிந்தனை மன்றம் வாயிலாக, காந்தியின் புகைப்படங்கள், பொருட்கள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டது. காந்தியின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்தும் மலர்கள் துாவி மரியாதை செலுத்தப்பட்டது. மேலும், மாணவ, மாணவியர் இடையே காந்தி குறித்து கட்டுரை மற்றும் ஓவியப் போட்டி நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசும் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை, பேராசிரியர் கவிதா உள்ளிட்ட பலர் செய்திருந்தனர்.

* வால்பாறை நகரின் உள்ள காந்தி சிலைக்கு நகராட்சி தலைவர் அழகுசுந்தரவள்ளி மாலை அணிவித்தார். நகராட்சி துணைத்தலைவர் செந்தில்குமார், சுகாதார அலுவலர் செந்தில்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர். விழாவில், சிறப்பாக பணியாற்றிய துாய்மை பணியாளர்களுக்கு நகராட்சி சார்பில் பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

* வால்பாறை நகர காங்.,கட்சி சார்பில் நடந்த விழாவில், ஐ.என்.டி.யு.சி., தலைவர் ராமசந்திரன் தலைமையில், காந்தி சிலைக்கு கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். காங்., நகர உதவி தலைவர் ஈஸ்டர்ராஜா, மண்டல தலைவர் டேனியல் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

* உடுமலை நகர பா.ஜ., சார்பில், காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, குட்டை திடலில் அமைந்துள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. அதே போல், காமராஜர் நினைவு நாளையொட்டி, பழைய பஸ் ஸ்டாண்ட் அருகேயுள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சிக்கு, நகர தலைவர் கண்ணாயிரம் தலைமை வகித்தார். செயலாளர் தம்பிதுரை, துணைத்தலைவர்கள் உமா, குப்புச்சாமி, நாச்சியப்பன், கண்ணப்பன், தன்ராஜ், மகளிர் அணி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

- நிருபர் குழு -






      Dinamalar
      Follow us