/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
காந்தி மாநகர் பள்ளி மாணவர்கள் அபாரம்
/
காந்தி மாநகர் பள்ளி மாணவர்கள் அபாரம்
ADDED : செப் 09, 2025 10:46 PM

கோவை; பேரூர் வட்டார அளவில் நடைபெற்ற அரசு பள்ளி மாணவர்களுக்கான இலக்கிய மன்ற போட்டிகளில், காந்தி மாநகர் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் அதிக மாணவ மாணவியர் வெற்றி பெற்றுள்ளனர்.
சிறார் திரைப்பட மன்றத்தில், கதை மற்றும் வசனம் பிரிவில் தனுஷ் கிருபாகரன், வர்ஷினி, நடிப்பு பிரிவில் சுரேஷ்பாபு, ஒளிப்பதிவு பிரிவில் தேவராஜ், சம்பூர்ணேஸ்வரன், ஆல்வின், வினாடி - வினா போட்டியில் பெலினா, ஸ்ரீ வைஷ்ணவி, போதி மித்ரா, பிரிதி நிதர்ஷா, ஆங்கில கட்டுரை போட்டியில் பெலினா, மூர்த்திகா, பேச்சு போட்டியில் தேவதர்ஷினி, தமிழ் பேச்சு போட்டியில் அல் முஷ் பினா, வர்ஷினி, கட்டுரைப்போட்டி சாரு, கவிதைப்போட்டி யஸ்வதி, கதை சொல்லுதல் போட்டியில் அபிதரணி ஆகியோர், வெற்றி பெற்றனர்.
தலைமையாசிரியர் விஜய லட்சுமி கூறுகையில், ''போட் டிகளில் பங்கேற்பதன் வாயிலாக, மாணவர்களின் ஆளுமைத்திறன் மற்றும் கல்வி சாராத கற்பனைத்திறன்கள் மேம்படுகின்றன. இது மாணவர்களைப் பள்ளிக்கு விடுப்பு எடுக்காமல் தொடர்ந்து வர ஊக்குவிக்கிறது. மாணவர்களின் இந்த வெற்றி, அவர்களின் பன்முகத் திறன்களுக்கும், ஆசிரியர்களின் அர்ப்பணிப்புக்கும் கிடைத்த அங்கீகாரமாக அமைந்துள்ளது,'' என்றார்.