/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
புறநகரில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை; ஹிந்து அமைப்பினர், பொதுமக்கள் கொண்டாட்டம்
/
புறநகரில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை; ஹிந்து அமைப்பினர், பொதுமக்கள் கொண்டாட்டம்
புறநகரில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை; ஹிந்து அமைப்பினர், பொதுமக்கள் கொண்டாட்டம்
புறநகரில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை; ஹிந்து அமைப்பினர், பொதுமக்கள் கொண்டாட்டம்
ADDED : ஆக 27, 2025 10:40 PM

- நமது நிருபர் குழு -
விநாயகர் சதுர்த்தியையொட்டி, மேட்டுப்பாளையம் பஸ் ஸ்டாண்ட் அருகே ஹிந்து முன்னணி சார்பில் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது.
ஹிந்து முன்னணி கோட்டச் செயலாளர் ராஜ்குமார், உட்பட ஏராளமானவர்கள் பங்கேற்றனர். கோவை கிழக்கு நகர ஹிந்து முன்னணி சார்பில், 65 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.
* கருமத்தம்பட்டி பகுதியில், இந்து முன்னணி அமைப்பு சார்பில், 30 இடங்களிலும், பொதுமக்கள் சார்பில், 33 இடங்களிலும், நேற்று விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. இ.மு., மாவட்ட தலைவர் சுப்பிரமணியம் தலைமையில், நிர்வாகிகள் வழிபாடுகள் நடத்தினர்.
* சூலுாரில் இந்து முன்னணி மற்றும் பொதுமக்கள் சார்பில், 90 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. இ.மு., மாவட்ட செயலாளர் ராஜ்குமார் தலைமையில் வழிபாடு நடந்தது.
* காரமடையில் ஹிந்து முன்னணியின் நகர, தெற்கு, வடக்கு சார்பில் 96 விநாயகர் சிலைகளும், காரமடை கிழக்கு ஒன்றிய பகுதிகளில் 47 விநாயகர் சிலைகளும், மேற்கு பகுதியில் 28 விநாயகர் சிலைகளும் என மொத்தம் 171 சிலைகள் பிரதிஷ்டை செய்து பூஜை செய்யப்பட்டது. கோவை வடக்கு மாவட்ட தலைவர் சிவபுகழ் தலைமை வகித்தார்.
* ---அன்னூர் மற்றும் கோவில்பாளையத்தில், 75 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. * சர்க்கார் சாமக்குளம் ஒன்றியத்தில், இந்து முன்னணி சார்பில் 33 இடங்களில் விநாயகர் சிலைகள் நேற்று பிரதிஷ்டை செய்யப்பட்டன.