/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஹோட்டல் பார்ட்டியில் தகராறுஆயுதங்களுடன் கும்பல் கைது
/
ஹோட்டல் பார்ட்டியில் தகராறுஆயுதங்களுடன் கும்பல் கைது
ஹோட்டல் பார்ட்டியில் தகராறுஆயுதங்களுடன் கும்பல் கைது
ஹோட்டல் பார்ட்டியில் தகராறுஆயுதங்களுடன் கும்பல் கைது
ADDED : டிச 26, 2025 05:12 AM

கோவைேஹாட்டலில் நடந்த பார்ட்டியில் ஏற்பட்ட தகராறு தொடர்பாக ஆயுதங்களுடன், 9 பேர் கைது செய்யப்பட்டனர்.
சிங்காநல்லுார் சூர்யா என்பவரின், 'பிக்டாடி' என்ற 'ஈவன்ட் மேனேஜ்மென்ட்' நிறுவனம் சார்பில், நீலாம்பூரிலுள்ள லீ மெரிடியன் ஹோட்டலில், கடந்த 20ம் தேதி, 'பார்ட்டி' நடந்தது. ஈரோடு வடக்கு மாவட்ட பா.ஜ. இளைஞரணி செயலாளர் ரகு சூர்யா, உதய தீபன், சூர்யகுமார், அபிஷேக் மற்றும் அவர்களது நண்பர்கள் கட்டணம் செலுத்தி பங்கேற்றனர். நடனம் ஆடிய போது ஏற்பட்ட தகராறில், ரகு சூர்யாவை, பிக்டாடி நிறுவன ஊழியர்கள் தாக்கினர். பின்னர் அங்கிருந்து ரகுசூர்யா மற்றும் நண்பர்கள் சென்று விட்டனர்.
பிக்டாடி நிறுவனம் சார்பில், கடந்த 24 ம் தேதி, பீளமேட்டிலுள்ள விஜய் விலானசா ஹோட்டலில் விருந்து நிகழ்ச்சி நடை பெறுவது இன்ஸ்டாகிராம் வாயிலாக ரகு சூர்யாவுக்கு தெரிய வந்தது. அதை தொடர்ந்து, ரகு சூர்யா மற்றும் 9 பேர் கொண்ட கும்பல், நான்கு கார்களில், அரிவாள், கத்தி, பாட்டல் உள்ளிட்ட ஆயுதங்களுடன் வந்தனர். அப்போது, பிக் டாடி நிறுவன சூர்யா, ஊழியர் தேவராஜ் ஆகியோர், ேஹாட்டலில் இருந்து வெளியே வந்த போது அவர்களை ஆயுதங்களால் சரமாரி தாக்கி விட்டு தப்பினர். இதில், படுகாயமடைந்த சூர்யா, தேவராஜிக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. புகாரின் பேரில், பீளமேடு போலீசார் வழக்கு பதிந்து, ரகு சூர்யா,29, ரிச்சர்ட்,26, ஸ்ரீமன், தீபக்,27, சூர்யகுமார்,27, வேதநாயகம்,26, வினோத் குமார்,25, முகமது உமர், உதய தீபன்,28, ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.இரண்டு கத்திகள் மற்றும் நான்கு கார்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

