/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கர்ப்பிணி போல் நடித்து பணம் வசூலிக்கும் பெண்கள் கும்பல்
/
கர்ப்பிணி போல் நடித்து பணம் வசூலிக்கும் பெண்கள் கும்பல்
கர்ப்பிணி போல் நடித்து பணம் வசூலிக்கும் பெண்கள் கும்பல்
கர்ப்பிணி போல் நடித்து பணம் வசூலிக்கும் பெண்கள் கும்பல்
ADDED : நவ 09, 2025 01:11 AM

கோவை: கர்ப்பிணிகள் போல் நடித்து பணம் வசூல் செய்யும் பெண்களை பிடிக்க, போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை சிங்காநல்லுார், பீளமேடு, நவஇந்தியா உள்ளிட்ட பகுதியில், பெண்கள் சிலர், குழுவாக சேர்ந்து கார், பைக் ஓட்டிகளை மறித்து நிறுத்துகின்றனர்.
வாகனங்களை நிறுத்தியதும், குழுவில் உள்ள ஒரு பெண் நிறைமாத கர்ப்பிணி என்றும், அவருக்கு பனிக்குடம் உடைந்து விட்டது. அவசரமாக மருத்துவமனையில் சேர்க்க வேண்டும், பணம் தாருங்கள் எனவும், அவசரப்படுத்துகின்றனர்.
வாகன ஓட்டிகள் பணம் கொடுத்த பின்னரே, அங்கிருந்து நகர விடுகின்றனர். ஆனால், உண்மையில் அவர்களில் யாரும் கர்ப்பிணி இல்லை. அவர்கள் கூறும் அத்தனையும், பொய். காரில் வருவோரே இவர்களது இலக்காக உள்ளது. இவர்களின் மோசடியை கண்டறிந்த நமது 'தினமலர்' நிருபர் குழுவினர், அவர்களை மருத்துவமனைக்கு அழைத்த போது தப்பி ஓடிவிட்டனர்.
இதே இடங்களில், 20 நாட்களுக்கும் மேல் இவர்கள் இந்த மோசடியை மேற்கொண்டு வருகின்றனர். வாகன ஓட்டிகளிடம், ரூ.1,000 முதல், ரூ.2,000 வரை பறிக்கின்றனர். குழந்தைகளை வைத்தும் பணம் கேட்பதாக அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். புகாரின் அடிப்படையில், போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

