/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'கஞ்சா சாக்லேட்' குற்றவாளி குண்டாஸ் சட்டத்தில் சிறை
/
'கஞ்சா சாக்லேட்' குற்றவாளி குண்டாஸ் சட்டத்தில் சிறை
'கஞ்சா சாக்லேட்' குற்றவாளி குண்டாஸ் சட்டத்தில் சிறை
'கஞ்சா சாக்லேட்' குற்றவாளி குண்டாஸ் சட்டத்தில் சிறை
ADDED : செப் 30, 2024 04:17 AM

கோவை : கஞ்சா சாக்லேட் விற்பனை செய்த ஒடிசாவை சேர்ந்த நபர் மீது, குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது.
கோவை, கோவில்பாளையம் பகுதியில் கடந்த ஆக., 26ம் தேதி கஞ்சா சாக்லேட் விற்பனை செய்ததற்காக, ஒடிசாவை சேர்ந்த சஞ்சயகுமார், 40 பெரியநாயக்கன் பாளையம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து, சுமார் 34 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
இந்நிலையில், இவர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க, எஸ்.பி., கார்த்திகேயன் பரிந்துரையின் பேரில், கலெக்டர் கிராந்தி குமார், உத்தரவு பிறப்பித்தார். இதையடுத்து அவர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ், சிறையில் அடைக்கப்பட்டார்.
கோவை மாவட்டத்தில் இந்த ஆண்டு, கஞ்சா வழக்கு குற்றவாளிகள் 16 பேர் உட்பட, 51 நபர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ், நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் தங்கள் பகுதிகளில், இதுபோன்ற குற்ற செயலில் ஈடுபடும் நபர்கள் குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க, 94981 81212 மற்றும் வாட்ஸ் அப் எண் 77081 00100 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.