ADDED : ஜன 23, 2026 05:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை,பெரிய கடை வீதி போலீசார், கெம்பட்டி காலனி பகுதியில் சோதனையில் ஈடுபட்ட போது, கஞ்சா கடத்தி சென்ற ஆர்.எஸ்.புரம் சகாதேவ் குன்வார்,38, கெம்பட்டி காலனி ராஜன்,53, ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் ஒரு கிலோ 200 கிராம் கஞ்சா, இரண்டு மொபல் போன் பறிமுதல் செய்யப்பட்டது.
காட்டூர் போலீசார், ஆவாரம்பாளையம் ரோடு பாலம் அருகில் ரோந்து சென்ற போது, கஞ்சா கடத்திய உ.பி. மாநிலத்தை சேர்ந்த ராகேஷ்,32, என்பவரை கைது செய்து 1.5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்தனர். ராமநாதபுரத்தில் பொது கழிப்பிடம் அருகே கஞ்சா விற்றதாக, புலியகுளம் மனோஜ்குமார்,22, கைது செய்யப்பட்டார். 220 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

