/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பழைய பஸ் ஸ்டாண்டில் தேங்கும் குப்பை சுகாதாரம் போயேபோச்சு
/
பழைய பஸ் ஸ்டாண்டில் தேங்கும் குப்பை சுகாதாரம் போயேபோச்சு
பழைய பஸ் ஸ்டாண்டில் தேங்கும் குப்பை சுகாதாரம் போயேபோச்சு
பழைய பஸ் ஸ்டாண்டில் தேங்கும் குப்பை சுகாதாரம் போயேபோச்சு
ADDED : மார் 13, 2024 10:30 PM

பொள்ளாச்சி, - பொள்ளாச்சி பழைய பஸ் ஸ்டாண்டில், குப்பை தேங்கி கிடப்பதால், சுகாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
பொள்ளாச்சி நகராட்சி பழைய பஸ் ஸ்டாண்டில், திருப்பூர், கோவை, உடுமலை, பழநி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் பஸ்கள் வந்து செல்கின்றன. தினமும், ஆயிரக்கணக்கான பயணியர் பயன்படுத்துகின்றனர்.
இந்நிலையில், பஸ் ஸ்டாண்ட் ஒரு பகுதியில், குப்பை அதிகளவு குவிக்கப்பட்டு, தேங்கி கிடக்கின்றன. மூட்டை, மூட்டையாக குப்பை குவிந்துள்ளதால், சுகாதாரச்சீர்கேடு ஏற்படுகிறது.
பொதுமக்கள் கூறியதாவது:
பொள்ளாச்சி நகராட்சி பழைய பஸ் ஸ்டாண்டில், குப்பையை அதிகளவு குவித்து வைத்து, பல நாட்கள் அகற்றாமல் அப்படியே விடுகின்றனர். மூட்டைகளாக கட்டப்படும் கழிவுகளில் இருந்து கடும் துர்நாற்றம் வீசுகிறது.
உள்ளூர் மட்டுமின்றி பல்வேறு பகுதிகளில் இருந்து வருவோர் முகம் சுளிக்கின்றனர். பஸ் ஸ்டாண்ட், குப்பை கிடங்கு போன்று மாறி வருவதை தடுக்க நகராட்சி நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுப்பதில்லை.
மேலும், தேங்கும் குப்பைக்கு அவ்வப்போது தீ வைக்கப்படுகிறது. இதனால், புகை சூழ்ந்து விடுவதால் மிகுந்த சிரமமாக உள்ளது. சுவாசக்கோளாறு உள்ளோர், கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.
பஸ் ஸ்டாண்டை துாய்மையாக பராமரிக்க குப்பை பிரச்னைக்கு தீர்வு காண நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.
வீணாகும் குப்பை தொட்டி
பஸ் ஸ்டாண்டில் திறந்த வெளியில் குப்பை குவிக்கப்படுகிறது. அதே நேரத்தில், குப்பையில் போட்டது போன்று, குப்பை தொட்டிகள் பயன்பாடின்றியும், பராமரிப்பின்றியும் கிடக்கின்றன. குப்பை தொட்டிகளை பராமரித்து பயன்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும். இல்லாவிட்டால், பஸ் ஸ்டாண்டில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும்.

