/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
குப்பைக்கு தீ வைக்கும் பிரச்னை : பொதுமக்கள் சாலை மறியல்
/
குப்பைக்கு தீ வைக்கும் பிரச்னை : பொதுமக்கள் சாலை மறியல்
குப்பைக்கு தீ வைக்கும் பிரச்னை : பொதுமக்கள் சாலை மறியல்
குப்பைக்கு தீ வைக்கும் பிரச்னை : பொதுமக்கள் சாலை மறியல்
ADDED : நவ 13, 2025 09:46 PM

பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள கூடலூர் நகராட்சி குப்பை கிடங்கு விவகாரம் தொடர்பாக பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பெரியநாயக்கன்பாளையம் அருகே கூடலூர் நகராட்சிக்குட்பட்ட எட்டாவது வார்டு டாஸ்மாக் கடை எதிரே மயானம் அருகே குப்பைகள் கொட்டப்படுகின்றன. சமூக விரோதிகள் நள்ளிரவில் குப்பைகளுக்கு தீ வைப்பதால், சாமி செட்டிபாளையம், ஜோதிபுரம், வீரபாண்டி உள்ளிட்ட பகுதிகளில் புகை பரவி பொதுமக்களுக்கு மூச்சு திணறல் ஏற்படுகிறது. தொடர் நிகழ்வாக இருந்து வரும் இப்பிரச்சனைக்கு உரிய தீர்வு காண வேண்டுமென நகராட்சி நிர்வாகத்திடம் பொதுமக்கள் பலமுறை தகவல் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை.
இந்நிலையில் நேற்று கூடலூர் நகராட்சி அ.தி.மு.க., எட்டாவது வார்டு கவுன்சிலர் தவமணி சிவகுமார் தலைமையில் சாமிசெட்டிபாளையம் மாரியம்மன் கோவில் முன்பு பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுடன் பெரியநாயக்கன்பாளையம் எஸ்.ஐ., நமச்சிவாயம் மற்றும் கூடலூர் நகராட்சி ஆணையாளர் பூவேந்திரன் ஆகியோர் பேச்சு நடத்தி, பிரச்சனைக்கு விரைவில் உரிய தீர்வு காணப்படும் என, உறுதிமொழி அளித்தனர். இதையடுத்து மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதித்தது.

